நடிகர் ஆனார் ராஜீவ் மேனன்

8/26/2022 12:18:29 AM

சென்னை: ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் இப்போது நடிகராக மாறியுள்ளார். மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன். பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அசுரன் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பாரதிராஜா, கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கும் படம் விடுதலை. இதில் ஆசிரியராகவும் போராளியாகவும் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடிக்கிறார். அவரது மகனாக போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் சூரி நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகராக ராஜீவ் மேனன் அறிமுகமாக இருக்கிறார். படத்தில் அரசு அதிகாரி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிப்பில் ஆர்வம் இல்லாத ராஜீவ் மேனன், இதற்கு முன் சில இயக்குனர்கள் கேட்டும் நடிக்க முன்வரவில்லை. இந்நிலையில் வெற்றிமாறன் மீதான அன்பால், அவர் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

Source link