ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

latest tamil news

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள முனுகோட் சட்டசபை எம்.எல்.ஏவாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி. இவர் தன்னுடைய எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தொகுதியில் இடை தேர்தல் அறிவிக்கப்படாத போதிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

20 ம் தேதி அன்று மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இத்தொகுதியில் பிரசாரம் செய்தார். அதற்கு பதிலடியாக இன்று பா.ஜ., சார்பில் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: நாடு முழுவதும் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்த போது தெலங்கானா சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் தலித் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் கேசிஆர் அரசு நிறைவேற்றவில்லை. அதுமட்டுமல்லாது மத்திய அரசின் திட்டங்களையும் தெலங்கானா அரசு அனுமதிக்கவில்லை வரும் தேர்தலில் தெலங்கானா மக்கள் பா.ஜ., வை ஆதரிக்க வேண்டும் இவ்வாறு அமித்ஷா கூறினார்.

latest tamil news

அடுத்த ஆண்டு தெலங்கானாவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மீண்டும் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் விதமாக பல்வேறு கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை முன்னோட்டமாக கருதி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link