தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலையில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. பகலிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது.

காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 13.20 மி.மீ. மழை பதிவனது. ஆய்க்குடியில் 8.60 மி.மீ. ராமநதி அணையில் 8 மி.மீ., குண்டாறு அணையில் 7 மி.மீ., சங்கரன்கோவிலில் 3 மி.மீ., செங்கோட்டை, கருப்பாநதி அணை, சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 81 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.32 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 78 அடியாகவும் இருந்தது.

மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.Source link