திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினசரி 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம் அருகே உள்ள அன்னதான கூடத்தில் தினசரி 300 பக்தர்களுக்கு முற்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தினசரி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

Source link