செய்திப்பிரிவு

-->

Last Updated : 14 Aug, 2022 04:13 AM

Published : 14 Aug 2022 04:13 AM
Last Updated : 14 Aug 2022 04:13 AM

திருப்பதி: வார இறுதி நாட்களான சனி, ஞாயிறை தொடர்ந்து சுதந்திர தின விழா திங்கட்கிழமை வருவதால் அன்றும் விடுமுறை என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால், திருப்பதியில் உள்ள கோதண்டராமர், கோவிந்தராஜர், திருச்சானூர் பத்மாவதி தாயார், கபில தீர்த்தம், ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் என அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், திருமலையிலும் ரூ.300 சிறப்பு தரிசனம் உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களாலும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே காணப்படுகிறது. இதில், சர்வ தரிசனத்திற்கு கோயிலுக்கு வெளியே சுமார் ஒரு கி.மீ தொலைவிற்கு வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் நேற்று சுவாமியை தர்ம தரிசனம் மூலம் தரிசிக்க 16 மணி நேரம் ஆனது.Source link