சென்னை; திமுக மூத்த நிர்வாகி செழியன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்; ‘திருவல்லிக்கேணி பகுதியில் கழகம் வளர்த்த உண்மைத் தொண்டர், முன்னாள் பகுதிச் செயலாளரும், தற்போதைய பகுதிக் கழகத்தின் அவைத்தலைவருமான திரு. க.வே. செழியன் அவர்கள் மறைவுற்றார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.

ஈடுசெய்யவியலா இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திருவல்லிக்கேணி பகுதி கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link