சமையல்
தலைவாழை: சத்து உருண்டை | cooking tips
Published : 26 Jan 2020 10:19 am
Updated : 26 Jan 2020 10:19 am
Published : 26 Jan 2020 10:19 AM
Last Updated : 26 Jan 2020 10:19 AM

தலைவாழை: சத்து உருண்டை
என்னென்ன தேவை?
ராகி மாவு – 2 கப்
மண்டை வெல்லம் – 1 கப்
நெய் – 4 டீஸ்பூன்
ஏலக்காய் – 6
முந்திரி – சிறிதளவு
எள் – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளுங்கள். அதில் மேலும் சிறிதளவு நெய் விட்டு ராகி மாவைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். மீதி நெய்யை உருக்கிக்கொள்ளுங்கள். ராகி மாவு, வெல்லம், ஏலக்காய், முந்திரி, எள் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள். மிதமான சூட்டில் நெய் விட்டு உருண்டைகளாகப் பிடியுங்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்து நிறைந்த உருண்டைகள் இவை.
சமையல்
தலைவாழை: சுவையான சோயா 65 | soya 65
Published : 26 Jan 2020 10:18 am
Updated : 26 Jan 2020 10:18 am
Published : 26 Jan 2020 10:18 AM
Last Updated : 26 Jan 2020 10:18 AM

வழக்கமான சோறு, குழம்புக்கு இணையாக அவ்வப் போது புதுமையான உணவு வகைகளைச் சாப்பிடக் குழந்தை கள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்புகிறார்கள். உணவகங் களுக்குச் சென்றால் செலவு கையைக் கடிக்குமோ என்ற அச்சம் ஒரு புறமும் உடலுக்கு ஒப்புக்கொள்ளுமா என்ற கவலை மறுபுறமும் வாட்டும். அதைவிடப் புதுமையான உணவு வகைகளை அவ்வப்போது வீட்டிலேயே செய்து ருசித்தால் எந்தக் கவலையும் தேவையில்லை என்கிறார் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த பி. கோமதி. அவற்றில் சிலவற்றுக்கான குறிப்புகளையும் அவர் தருகிறார்.
சோயா 65
என்னென்ன தேவை?
சோயா உருண்டைகள் – 50 கிராம்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்
மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு – தலா 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து அதில் சோயா உருண்டைகளைப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி, குளிர்ந்த நீரில் போட்டுத் தண்ணீர் இல்லாமல் பிழிந்துகொள்ளுங்கள். அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, இஞ்சி-பூண்டு விழுது, சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகிய வற்றைச் சேர்த்துப் பிசைந்து 20 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
தொகுப்பு: அ.அருள்தாசன்
படங்கள்: மு. லெட்சுமி அருண்
சமையல்
தலைவாழை: ரைஸ் கட்லெட்
என்னென்ன தேவை?
சோறு – 1 கப்
உருளைக் கிழங்கு – 2
கடலை மாவு – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள் பொடி, கரம் மசாலா – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சமையல்
தலைவாழை: பிரெட் ஃபிரை | cooking tips
என்னென்ன தேவை?
கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 2
பிரெட் துண்டுகள் – 10
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்
மல்லித் தழை – சிறிதளவு
மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு – தலா 1 டீஸ்பூன்
உப்பு, கடலை எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாடை போன பிறகு வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். எலுமிச்சைச் சாறு கலந்து இறக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டியெடுங்கள். பிரெட்டைச் சப்பாத்திப் பலகையில் வைத்து தேய்த்து, அதை முக்கோண வடிவில் வெட்டியெடுங்கள். மசாலா கலவையை உள்ளே வைத்து, பிரெட்டின் ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
-
இந்தியா2 years ago
சீனாவில் தயாரிக்கும் டீவிக்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!
-
அரசியல்1 year ago
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி; மற்ற கட்சிகள் நிலவரம் | rajasthan local body election result: bjp win more than congress | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
சினிமா2 years ago
மருத்துவமணையிலிருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள் – நடிகை விஜயலட்சுமி
-
அரசியல்2 years ago
புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! – மரு.அன்புமணி இராமதாசு!
-
தமிழ்நாடு1 year ago
உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்- Dinamani
-
அரசியல்1 year ago
தொழிலதிபர் to அரசியல் பணி – அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன? | Background of Arjuna Moorthy from Business to Politics | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
அரசியல்2 years ago
சிறுமிக்கு பாலியல் தொல்லை – முன்னால் அதிமுக எம்.எல்.ஏ மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!
-
உடல்நலக் குறிப்புகள்2 years ago
கொரோனா தொற்று எல்லா காலத்திலும் பரவும்! – WHO