திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link