என்னதான் எலக்ட்ரிக் கார்களுக்கு மவுசு இருந்தாலும், சார்ஜிங் வசதிகள் போதுமான அளவு இல்லாததால் நீண்ட தூர பயணத்தை விரும்புவோர் வாங்க தயங்குகின்றனர். மற்ற கார்களை விட விலையும் அதிகம். எனவே, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இருப்பது சிஎன்ஜி கார்கள்தான். பல்வேறு கார் நிறுவனங்கள் சிஎன்ஜி கார்களை வெளியிட்டுள்ளன. இதில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதியின் டாப் 5 சிஎன்ஜி கார்கள் விவரம் வருமாறு:

1செலரியோ: சிஎன்ஜி கார்களில் அதிக மைலேஜ் வழங்கும் ஒரு காராக இது கருதப்படுகிறது. இதில் வேகன் ஆர்-ல் உள்ள அதே 1.0 லிட்டர் கே10சி இன்ஜின்தான் இடம்பெற்றுள்ளது. அராய் நிறுவனத்தின் சான்றிதழின்படி ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 35.6 கி.மீ மைலேஜ் வழங்கும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் உள்ள இன்ஜின் அதிகபட்சமாக 57 எச்பி பவரையும் 82 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். செலரியோவின் விஎக்ஸ் வேரியண்டில் மட்டுமே சிஎன்ஜி உள்ளது. இதன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.6.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2வேகன் ஆர்: வேகன் ஆர், 1.0 லிட்டர் கே10சி மற்றும் 1.2 லிட்டர் கே12 சி என்ற 2 இன்ஜின் வகைகளில் கிடைக்கிறது. இதில் 1.0 லிட்டர் கே10சி மட்டுமே சிஎன்ஜியுடன் வருகிறது. இதன் இன்ஜின் அதிகபட்சமாக 57 எச்பி பவரையும், 82 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜியில் ஒரு கிலோவுக்கு 34.05 கி.மீ செல்லலாம். எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய 2 வேரியண்ட்களில் மட்டும் சிஎன்ஜி உள்ளது. ஷோரூம் துவக்க விலையாக எல்எக்ஸ்ஐ சுமார் ரூ.6.42 லட்சம், விஎக்ஸ்ஐ சுமார் ரூ.6.86 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3ஆல்டோ கே10: மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் 3வது தலைமுறை ஆல்டோ கே10 அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் 0.8 லிட்டர் கொண்ட முந்தைய வேரியண்டும் விற்பனையில் உள்ளது. இதில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டும் உள்ளன. இதில் உள்ள 796சிசி 3 சிலிண்டர் இன்ஜின், அதிகபட்சமாக 40எச்பி பவரையும் 60என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அராய் சான்றிதழின்படி சிஎன்ஜியில் கிலோவுக்கு 31.59 கி.மீ மைலேஜ் வழங்கும். இதன் எல்எக்ஸ்ஐ (ஓ) வேரியண்ட் சிஎன்ஜியில் வருகிறது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.5.03 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆல்டோ கே10ல் 1.0 லிட்டர் கே10சி இன்ஜின் உள்ளது. இது விரைவில் சிஎன்ஜியுடன் வெளிவரும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

4மாருதி சுசூகி டிசையர்: மாருதி சுசூகியின் மற்றொரு பிரபல கார் டிசையர். இதில் 1.2 லிட்டர் கே12சி இன்ஜின் உள்ளது. சமீபத்தில் இந்த இன்ஜினுடன் ஸ்விப்ட் சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டது. டிசையர் சிஎன்ஜி ஒரு கிலோவுக்கு 31.12 கி.மீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு போட்டியாக உள்ள அவுரா சிஎன்ஜி கிலோவுக்கு 28.5 கிமீ, டிகோ சிஎன்ஜி 26.49 கிமீ மைலேஜ் வழங்கும் என அராய் சான்று வழங்கியுள்ளது. ஸ்விப்டை போல டிசையர் சிஎன்ஜியில் விஎக்ஸ்ஐ முதல் இசட் எக்ஸ்ஐ வேரியண்ட் வரை உள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.8.23 லட்சம் முதல் ரூ.8.91 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5ஸ்விப்ட் சிஎன்ஜி: மாருதி ஸ்விப்ட் சமீபத்தில் அறிமுகம் செய்த இந்த சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக 77 எச்பி பவரையம் 98.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்களில் வருகிறது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.7.77 லட்சம் முதல் ரூ.8.45 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link