உலகம்
டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..! | Government to exit Tata Communications by selling 26.12% stake

26.12 சதவீத பங்கு விற்பனை
மத்திய அரசிடம் இருக்கும் நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டும் இலக்கை அடைய முடியாத நிலையில், தற்போது DIPAM அமைப்பு டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 26.12 சதவீத பங்குகளின் ஒரு பகுதியை டாடா குழுமத்திற்கும், ஒரு பகுதியை ஆஃபர் பார் சேல் பிரிவில் விற்பனை செய்து சுமார் 8000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.

DIPAM அமைப்பு
மேலும் இந்தப் பங்கு விற்பனையை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் 16 சதவீத பங்குகளை ஆபர் பார் சேல் பிரிவில் விற்பனை செய்ய DIPAM அமைப்பு வர்த்தக வங்கிகள், தரகு நிறுவனங்களிடம் விருப்ப விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப் பிப்ரவரி 3ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள பங்குகளை டாடா குழுமம் வாங்க உள்ளது.

டாடா கம்யூனிகேஷன்ஸ் லாபம்
டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக 309 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 4.28 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் 2020 மார்ச் லாக்டவுன் அறிவிப்பில் இருந்து சுமார் 430 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்கு மதிப்பு
மத்திய அரசின் பங்கு விற்பனை அறிவிப்பைத் தொடர்ந்து டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 6.66 சதவீதம் சரிந்து 1,129.05 ரூபாயில் இருந்து 1,053.80 ரூபாய்க்குச் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களும், இந்நிறுவனத்தின் பங்கு உரிமையாளர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

2.1 லட்சம் கோடி இலக்கு
மத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டும் திட்டத்தில் இதுவரை 15,220 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. DIPAM அமைப்பின் இரு முக்கியத் திட்டங்களான ஏர் இந்தியா மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களின் பங்கு விற்பனை அடுத்த நிதியாண்டுக்கு ஒத்துவைத்துள்ள நிலையில் இலக்கை அடையத் தவறியுள்ளது.
உலகம்
நாட்டின் ஒற்றுமைக்காகப் பணியாற்றுவேன்: கமலா ஹாரிஸ் ட்வீட் | I will work to unify our country, tackle the challenges facing our nation
நாட்டின் ஒற்றுமைக்காகவும், சவால்களைச் சமாளிப்பதற்காகவும் பணியாற்ற இருக்கிறேன் என்று அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை நண்பகலில் பதவி ஏற்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாளை முதல் நாட்டின் ஒற்றுமைக்காவும், எங்கள் தேசம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், அமெரிக்காவின் வாக்குறுதியைப் புதுப்பிக்கவும் பணியாற்ற இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Starting tomorrow, @JoeBiden and I will work to unify our country, tackle the challenges facing our nation, and renew the promise of America.
மேலும், ”சூப்பர் ஹீரோக்களாக வளர வேண்டும் என்று கனவு காணும் அனைத்துச் சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் என்னிடம் ஒரு செய்தி உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் நம்மிடையேதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள்” என்று கமாலா ஹாரிஸ் பதிவிட்டுள்ளார்.
உலகம்
Budget 2021.. அலுமினிய துறையின் முக்கிய எதிர்பார்ப்பு.. பட்ஜெட்டில் நிறைவேற்றுமா அரசு..! | Budget 2021: India aluminium industry seeks govt big support

அலுமினிய துறையில் எதிர்பார்ப்பு
அதிகளவிலான இறக்குமதி காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகார்களும் சமீப காலமாகவே அதிகரித்து வருகின்றது. ஆக அதிகளவிலான, குறைந்த விலையில் இவ்வாறு அலுமினியம் ஸ்கிராப்களை இறக்குமதி செய்வதை தடுக்கவும், அடிப்படை சுங்க வரிக் கட்டணத்தினை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

அலுமினியம் அசோசியேஷன் எதிர்பார்ப்பு
உண்மையில் குறைந்த விலையில் அதிகளவிலான இறக்குமதிகள், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பெரும் அச்சுறுத்தி வருகின்றது. அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் 2021 – 22ல் இந்திய அலுமினியம் அசோசியேஷன் அமைப்பு, இத்துறையை ஆதரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

நிலக்கரிக்கான செஸ் வரியை நீக்க வேண்டும்
இது அலுமினியம் மட்டும் அல்ல, காப்பர், ஜிங்க், லெட், நிக்கல் உள்ளிட்ட உலோகங்களுக்கும், இந்த அடிப்படை சுங்க வரியை அதிகரிக்க வேண்டும் என்றும் இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதோடு அலிமினியம் போன்ற அதிக சக்தி வாய்ந்த துறைகளை ஆதரிப்பதற்காக நிலக்கரிக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைக்க வேண்டும் என்றும் இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இது மேற்கொண்டு இந்த துறையை ஊக்குவிக்கும் என இந்த துறையினர் கூறுகின்றனர்.

இதற்கு வரியை குறைக்க வேண்டும்
இந்திய அலுமினிய துறையானது அதிகளவிலான இறக்குமதியால் ஒரு சவாலான கட்டத்தில் உள்ளது. ஒரு பக்கம் அதிக இறக்குமதி, மறுபக்கம் உற்பத்தி குறைப்பு, மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, தளவாட செலவுகள் என அனைத்தும் இத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆக மூலதன பொருட்கள் இறக்குமதி மீதான வரியை திரும்ப பெறுவதனையும் இந்த துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

கோரிக்கை நிறைவேறுமா?
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று. அதோடு அலுமினிய துறை நாட்டின் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும், ஆத்மா நிர்பார் திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு எரிசக்தி பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, மின்மயமாக்கல், விண்வெளி, ஆட்டோமொபைல், நீடித்த நுகர்வோர் பொருகள், பேக்கேஜிங் போன்ற பல துறைகளில் அலுமினியம் பயன்பட்டு வருகின்றது. இதன் மூலம் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக இத்துறையினரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
உலகம்
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..! | S&P warns of risks to banking systems of emerging markets in 2021

எந்தெந்த நாடுகளில் ஆய்வு
இது குறித்தான ஆய்வினை எஸ்& பி 15 பெரிய வங்கி அமைப்புகளுடன் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் அர்ஜெண்டினா, பிரேசில், இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

என்னென்ன பிரச்சனை
அதோடு இந்த ரேட்டிங்ஸ் நிறுவனம் மூன்று முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு எச்சரித்துள்ளது. அதில் முதலாவது சொத்து தர குறிகாட்டிகள் சரிவு, நிலையற்ற அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டு கொள்கை நிச்சயமற்ற தன்மை, மூலதனம் பாதிப்பு ஆகும்.

கொரோனா பற்றிய அச்சம்
எனினும் மத்திய வங்கிகள் பொருளாதார மீட்சி மற்றும் சாதகமான பொருளாதார நிலைக்காக வட்டி விகிதங்களை அப்படியே வைத்திருக்கலாம். எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் நிலவி வருகின்றது. இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு மேற்கொண்டு அச்சங்களாகவே இருந்து வருகின்றது. இது பொருளாதார வளர்ச்சியினை தாமதப்படுத்தலாம். இது வங்கிகளுக்கு பிரச்சனையாகவே அமையும் என்றும் கூறியுள்ளது.

கொரோனாவின் பரிணாமம்
இது வங்கி அமைப்புகளில் மேற்கொண்டு பிரச்சனைகளை உருவாக்கலாம் என்றும் இந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. எனினும் கொரோனாவின் பரிணாமம் மாறிக் கொண்டேயுள்ளது. இதன் விளைவுகள் பொருளாதாரத்தில் இருக்கலாம் எண்றும் எஸ்&பி நம்புகிறது.
-
இந்தியா2 years ago
சீனாவில் தயாரிக்கும் டீவிக்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!
-
அரசியல்1 year ago
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி; மற்ற கட்சிகள் நிலவரம் | rajasthan local body election result: bjp win more than congress | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
சினிமா2 years ago
மருத்துவமணையிலிருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள் – நடிகை விஜயலட்சுமி
-
அரசியல்2 years ago
புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! – மரு.அன்புமணி இராமதாசு!
-
தமிழ்நாடு1 year ago
உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்- Dinamani
-
அரசியல்2 years ago
சிறுமிக்கு பாலியல் தொல்லை – முன்னால் அதிமுக எம்.எல்.ஏ மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!
-
அரசியல்1 year ago
தொழிலதிபர் to அரசியல் பணி – அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன? | Background of Arjuna Moorthy from Business to Politics | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
உடல்நலக் குறிப்புகள்2 years ago
கொரோனா தொற்று எல்லா காலத்திலும் பரவும்! – WHO