வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்-மத்திய பிரதேசத்தில் டாக்டர்களின் அலட்சியத்தால், சிகிச்சை பெற முடியாமல் 5 வயது சிறுவன், தாயின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜபல்பூரைச் சேர்ந்த சஞ்சய் பாண்ட்ரே என்பவரின் 5 வயது மகனுக்கு, நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் டாக்டர் மற்றும் நர்சுகள் யாரும் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பெற முடியாத சிறுவன் தாயின் மடியிலேயே உயிரிழந்தான்.

இது பற்றி டாக்டரிடம் விசாரித்தபோது, ‘என் மனைவி முந்தைய நாள் விரதம் இருந்ததால் சோர்வாக இருந்தார். ‘அதனால், அவரை கவனித்துவிட்டு மருத்துவமனைக்கு வர தாமதமாகிவிட்டது’ என அலட்சியமாக பதிலளித்துள்ளார். இது குறித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement