மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இதற்கான ஹர்மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 3வது ஒரு நாள் போட்டி அவருக்கு கடைசி சர்வதேச போட்டியாகவும், பிரியாவிடை ஆட்டமாகவும் இருக்கும் என பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2002ல் அறிமுகமான அவர் இதுவரை இந்தியாவுக்காக 12 டெஸ்ட், 201 ஒரு நாள் மற்றும் 68 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார்.

Source link