ஒசாகா: ஜப்பான் ஓபன் பேட்மின்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்,  இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 2வது சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிக்கு பிறகு ஜப்பானின் ஒசாகா நகரில் ஜப்பான் ஓபன் பேட்மின்டன் போட்டி நடைபெறுகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர்  எச்.எஸ்.பிரணாய், ஹாங்காங்கின்  கா லாங் அங்குசை  எதிர்கொண்டார்.முதல் செட்டில்  பிரணாய் 11-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தபோது  அங்குஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அதனால்  பிரணாய் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பட் – ஷிகா கவுதம் இணை  தென் கொரியாவின்  பெய்க் ஹ நா, லீ யூ லிம் இணையிடம் 15-21, 9-21 என நேர் செட்களில் தோல்வியை சந்தித்தது.

Source link