சென்னை: ஜனனி சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.36 லட்சம் பிரசவங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனனி சுரக்‌ஷா யோஜனா மத்திய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் குறைக்க செயல்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நகர்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 700 ரூபாயும், கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் 2019-20ம் ஆண்டில் 4,21,182 பிரசவங்களும், 2020-21ம் ஆண்டில் 3,68,295 பிரசவங்களும், 2021-22ம் ஆண்டில் 3,36,304 பிரசவங்களும் நடைபெற்றுள்ளது.

இதில் 2021-22ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் 3804, செங்கல்பட்டு மாவட்டத்தில் 9300, சென்னையில் 29,414, கோவையில் 9651 , கடலூரில் 12,461, தருமபுரியில் 10,303, திண்டுக்கலில் 7568, ஈரோட்டில் 5176, கள்ளக்குறிச்சியில் 14,768, காஞ்சிபுரத்தில் 14,768, கன்னியாகுமரியில் 5936, கரூரில் 8011, கிருஷ்ணகிரியில் 10,979, மதுரையில் 18,818, மயிலாடுதுறையில் 3244, நாகையில் 2028, நாமக்கலில் 5234, பெரம்பலூரில் 3502, புதுக்கோட்டையில் 6429, ராமநாதபுரத்தில் 3945, சேலத்தில் 14,298, சிவகங்கையில் 6512, தென்காசியில் 4416, தஞ்சாவூரில் 13,874, தேனியில் 8863, நீலகிரியில் 2492, திருவள்ளுரில் 5988, திருவாரூரில் 3757, திருச்சியில் 6064, நெல்லையில் 7264, திருப்பத்தூரில் 5664, திருப்பூரில் 8187, திருவண்ணாமலையில் 18182, தூத்துக்குடியில் 15,593 , வேலூரில் 9039, விழுப்புரத்தில் 12,492 , விருதுநகரில் 9946 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.Source link