* ஒன்றிய மற்றும் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. – பிரதமர் மோடி* காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் கட்சியின் விதி முறைப்படி நடக்கும். தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே.  – காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான்* நீட் விலக்குதான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு. நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில், ஒன்றிய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவழித்துள்ளது. – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Source link