[ad_1]

தேவை:

சுத்தம் செய்த நண்டு – 8.
இடித்த சின்ன வெங்காயம் – 1.
பொடியாக நறுக்கிய தக்காளி – 1.
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
கறிவேப்பிலை – 1 கொத்து.
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

அரைக்க:

தேங்காய்த்துருவல் – 1/4 கப்.
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்.
கசகசா – 1 டீஸ்பூன்.
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – 7.

பக்குவம்:

காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும்.  தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து விழுதாக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய  வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது… என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு  சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். நண்டு வெந்ததும்  அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி  இறக்கவும்.

குறிப்பு: நண்டு விரைந்து வெந்துவிடும் என்பதால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். எப்பொழுதும் சமைக்கும் நேரத்தில்தான் நண்டை சுத்தம் செய்யவேண்டும். முன்பே சுத்தம் செய்தால் சுவை மாறும். கிருமிகள் சேரும். நண்டுக்கு மிளகுக்கு பதில் மிளகாயைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நண்டு, மிளகு இரண்டுமே சூட்டை  அதிகப்படுத்தும்.

[ad_2]

Source link