Connect with us

கல்வி - வேலை

சுதந்திர தினக் கட்டுரை: காந்தியின் கனவு நனவாகும் வளாகம்

தங்குமிடம், உணவு போன்ற அத்தியாவசியங்களில் தொடங்கி அதிநவீனத் தொலைத்தொடர்பு வசதிகள்வரை அனைத்துக்கும் அடியுரமாக உடலுழைப்புத் தொழிலாளர்கள்தான் உள்ளனர். ஆனால், “இப்பவெல்லாம் எங்கே நல்ல தச்சர் கிடைக்கிறாங்க?”, “ஒரு பிளம்பரைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு நிறைய சிரமப்பட்டேன்” எனச் சொல்லும் நிலைதான் உள்ளது.

15chsrs_thakkar55right

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் நம் பார்வையிலேயே படாமல் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் இழந்து நமது தேசத்தை நாள்தோறும் கட்டிக்கொண்டிருப்பது இந்த உடலுழைப்புத் தொழிலாளர்கள்தான்.

Source link

கல்வி - வேலை

அன்பாசிரியர் 19: புகழேந்தி – கிராமப்புற மாணவர்கள் கொண்டாடும் ஆசான்! | அன்பாசிரியர் 19: புகழேந்தி – கிராமப்புற மாணவர்கள் கொண்டாடும் ஆசான்!

‘பொறியாளராக ஆசைப்பட்டு சந்தர்ப்ப வசத்தால் ஆசிரியர் ஆனேன்; பின்னர் செய்யும் வேலையில் முழு ஈடுபாடு வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன்’ என்கிறார் ஆசிரியர் புகழேந்தி. ஆசிரியர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், இயற்கை ஆர்வலர் என பன்முக பரிமாணங்கள் கொண்டவர். அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்…

”அப்போது கடலூர் மாவட்டத்தின் கார்கூடல் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வசித்த குறிப்பிட்ட சமூகத்தினர், நாடோடிகளாக இருந்தனர். பாத்திரத்துக்கு ஈயம் பூசும் தொழிலை மேற்கொண்ட அவர்கள், ஆறு மாதங்கள் கார்கூடலிலும், அடுத்த ஆறு மாதங்கள் வேறு ஊர்களிலும் வசித்தனர். இதனால் அந்த சமூகத்தினர் யாரும் கல்வி கற்க முடியாமல் இருந்தது.

அறிவழகன் என்ற சிறுவன், கற்கும் வயதில் இருந்தாலும் பள்ளிக்கு வர முடியாமல் இருந்ததைப் பார்த்தேன். அவர்களிடம் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினோம். ‘பெற்றவர்கள் ஊரை விட்டுச் சென்றால் நாங்கள் அந்த சிறுவனை பார்த்துக் கொள்கிறோம்’ என்று ஊர்க்காரர்கள் உறுதியளித்தனர். மிகுந்த யோசனைக்குப் பின் அவர்கள் சம்மதித்தனர். அவன் சாதிப்பிள்ளை சமூகத்தின் முதல் தலைமுறை மாணவன் ஆனான். எட்டாவது வரை அதே பள்ளியில் படித்தான். இதனால் அந்த சமூகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதல்முறையாக சாதிப்பிள்ளை சமூக மக்களின் வரலாற்றை ஆய்வு செய்து புத்தகம் எழுதினேன்.

குழந்தை விஞ்ஞானிகள்

ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. அந்த வருட போட்டிக்கு, ‘அனைவருக்கும் சத்தான உணவு’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது நாங்கள் ‘நெல் வயலில் மீன் வளர்க்க முடியுமா?’ என்ற திட்டத்தை கையில் எடுத்தோம். நம்புங்கள், பழங்காலத்தில் மீன்கள் வயலில் இருந்தன. யூரியாக்கள், உரங்களைப் போட்டுப் போட்டு நாம்தான் மீன்களை அழித்துவிட்டோம்.

இந்த செயல்திட்டத்துக்காக சுமார் மூன்று மாதங்கள் வேலை பார்த்தோம். வட்ட, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியாக தேசிய அளவில் எங்கள் செயல்த்ட்டம் தேர்வானது. ஐந்து மாணவர் கொண்ட குழுவில், குழுத்தலைவி எட்டாம் வகுப்பு மாணவி. இதுவரைக்கும் விருத்தாச்சலத்தை தாண்டி வெளியே சென்றதில்லை. மாநாடு லக்னோவில் நடக்க இருந்தது. ஆசிரியர்களோ, பெற்றோர்களோ செல்ல முடியாத சூழலில், அறிவியல் இயக்க உறுப்பினர்களோடு மாணவி லக்னோ சென்றார். அப்துல் கலாமின் தலைமையில் அவர்கள் அனைவரும் ‘குழந்தை விஞ்ஞானி’ பட்டத்தை வென்று திரும்பினர்.

அந்த சிறுவர்களில் ஒருவரான குணசீலன் இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. படிக்கிறார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவரான அவருக்கு பெரிய பின்புலமில்லை. வேலைக்குப் போகவில்லையா என்று கேட்டதற்கு, ‘கார்கூடல் செயல்திட்டம்தான் என்னை ஆராய்ச்சிக்கு வித்திட்டது’ என்கிறார். இந்த மனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்கள்தான் நம் நாட்டுக்கு முக்கியத்தேவை.

கார்கூடல் நடுநிலைப்பள்ளியில் வேலை பார்த்தபோது குழந்தைகளுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிப்பது வழக்கம். பொம்மைகளை வைத்து பாடம் படிப்பது, பொம்மைகள் செய்ய கற்றுக்கொள்வது ஆகிய செயல்பாடுகளில் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டினர். மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக இருப்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன்.

ராஜ்ய புரஸ்கார் விருது

சமூக சேவைகளில் ஈடுபாடு, விளையாட்டில் ஆர்வம், மின்சாரம் தொடர்பான அடிப்படை அறிவு, படிக்கத் தெரியாதவர்கள், முதியோர்களுக்கு கற்றுக்கொடுப்பது, சேமிக்கும் பழக்கம், அடிப்படை சமையல்களை கற்றுக் கொள்வது, சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குவது, அடிப்படை சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் சிறந்து விளங்கும் சாரணர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் என்னும் அரசு விருது, ஆளுநரின் கையால் வழங்கப்படும். 2001-ல் நடுநிலைப் பள்ளிகளிலேயே முதல்முறையாக எங்கள் பள்ளி மாணவர் வாங்கினார். ஊரே மகிழ்ந்து வியந்த தருணம் அது.

கணக்கும் இனிக்கும்

இப்போது கடலூர், மன்னம்பாடி அரசுப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிகிறேன். பொதுவாக பாடங்கள் எளிமையாக கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது அரசுப் பள்ளிகளிலும், டீச்சிங்கை விட கோச்சிங்தான் முக்கியமாக மாறியிருக்கிறது. மதிப்பெண்ணை மட்டுமே இலக்காகப் பார்க்காமல், அரசு ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்றார்.

அன்பாசிரியர் புகழேந்தி, >>’கணக்கும் இனிக்கும்’ என்ற வலைத்தளத்தில், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரையான வகுப்புகளின் மாதிரி வினாத்தாள், கணக்குப் புதிர்கள், கணிதவியல் மேதைகளின் சுருக்க வரலாறு ஆகியவற்றைப் பதிவிடுகிறார். அத்தோடு மன்னம்பாடி பள்ளியின் பெயரில், வலைப்பக்கத்தை நிர்வகிக்கிறார். அதில் பள்ளி மாணவர்களை விவாதங்களில் பங்கெடுக்க வைத்து அவற்றை பதிவு செய்கிறார். மாணவர்களின் செயல்திட்டங்கள், கல்வி இணை செயல்பாடுகள் ஆகியவற்றையும் புகைப்படங்களோடு பதிவு செய்துவருகிறார். காண: >மன்னம்பாடி அரசுப்பள்ளி

இலக்கிய முகம்

இதுவரை இவர் எழுதி 8 நூல்கள் வெளி வந்துள்ளன. அன்பாசிரியர் புகழேந்திக்கு இயல்பாகவே இலக்கியத்தில் ஆர்வம் என்பதால், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மாணவர்களை கட்டுரை எழுதச் சொல்லியும், கவிதை படிக்கச் சொல்லியும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களே மாணவர் மலரைத் தயாரிக்கின்றனர். கார்கூடல் பள்ளியில் தளிர் என்ற பெயரில் மாணவர் மலர் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது மன்னம்பாடி உயர்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும் மாவட்ட கல்வி அலுவலரின் உரையோடு மாணவர் மலர் வெளியிடப்படுகிறது.

மாறி வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ப, இணையம் மூலம் கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அன்பாசிரியர் புகழேந்தி. தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் கணினியைப் பெற்றவர், இப்போது பள்ளியை ஸ்மார்ட் வகுப்பறை ஆக்கும் முயற்சியில் இருக்கிறார்.

ஆசிரியர் புகழேந்தியின் தொடர்பு எண்: 9488848519

*


‘அன்பாசிரியர்’ தொடரைப் பாராட்டி, சட்டீஸ்கரில் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் டாக்டர். சி.ஆர். பிரசன்னா ஐ.ஏ.எஸ். அனுப்பியுள்ள வாழ்த்து


வாழ்த்துகள், உங்களின் அன்பாசிரியர் கட்டுரைத் தொடரை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேவைகளை, எழுத்து ஊடகத்தின் வழியாக நீங்கள் வெளிக்கொணரும் விதத்துக்கு எனது பாராட்டுகள். இது ஆசிரியர்களை இன்னும் உற்சாகப்படுத்தி படித்த, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும். இந்த தொடர், வெளியில் அதிகமாக அறியப்படாத நம் நாட்டின் உண்மையான நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. அவர்களை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!


நான் இந்த பெருமைக்குரிய சேவையில் இருப்பதற்கு எனது ஆசிரியர்கள் மட்டுமே காரணம்.

க.சே. ரமணி பிரபா தேவி – தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 18 – மகாலட்சுமி: மலைவாழ் மாணவர்களுக்காக மேன்மைப் பணி!Source link

Continue Reading

கல்வி - வேலை

அன்பாசிரியர் 20: உமா மகேஸ்வரி- அசத்தும் ஆசிரியர்களின் தோழர்!

அரசுப் பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடங்கிய உமா மகேஸ்வரி, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர், சமச்சீர் கல்வி சமூக அறிவியல் புத்தக ஆசிரியர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். தன்னுடைய நீண்ட பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

என்னுடைய எல்லா மாணவர்களும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. பின்னாட்களில் தான் அது தவறு என்று உணர்ந்தேன். ஆரம்ப காலத்தில் எல்லா ஆசிரியர்களையும் போல மதிப்பெண்களில்தான் அதிக கவனம் செலுத்தினேன்.மெல்ல மெல்ல தான் மதிப்பெண்களில் மட்டும் வெற்றியில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

Source link

Continue Reading

கல்வி - வேலை

அன்பாசிரியர் 21: ரவி – காணொளி வழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர் | அன்பாசிரியர் 21: ரவி- காணொளி வழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்

சிறந்த ஆசிரியர் கடந்த காலத்தை நிகழ்த்துகிறார்; நிகழ்காலத்தை வெளிப்படுத்துகிறார்; எதிர்காலத்தை உருவாக்குகிறார்.

”சமூகத்தின் ஆணிவேர்கள் குழந்தைகள். அவர்களை மேம்படுத்த கற்பித்தலை விடச் சிறந்த வழி எதுவும் இல்லை. அதனாலே ஆசிரியப் பணிக்கு வந்தேன். இதில் இனம்புரியா ஆத்ம திருப்தியை உணர்கிறேன்” என்கிறார் ஆசிரியர் ரவி. பாடப் புத்தகம் தவிர்த்து கணினி வழியாகவே பாடம் எடுக்கும் அறிவியல் ஆசிரியர் ரவி புதுக்கோட்டை, கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார்.

தன் பணி, பயணிக்கும் பாதை குறித்து ஆர்வத்துடன் அவர் பேசியதிலிருந்து…

கணினி வழிக் கல்வி

ஆசிரியர் பணிக்கு முன்னால், கணிப்பொறி சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தேன். அதனால், புத்தகத்தை பயன்படுத்தாமல் கணிப்பொறி வழியாகக் கற்பித்தல் என்பது எனக்கு எளிதாகவே இருக்கிறது. பாடப்புத்தகத்தை ஸ்கேன் செய்து, கற்பிக்கக்கூடிய பாடத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பவர் பாயிண்ட் பிரசண்டேஷனாக தயாரித்துக்கொள்கிறேன். ரோட்டரி கிளப் மூலம் புரொஜக்டரை நன்கொடையாகப் பெற்று அதன்மூலம் பாடங்களை திரையிட்டுக் காண்பிக்கிறோம். இதனால் மாணவர்கள் அனைவரும் கணிப்பொறி வழியாகவே பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர்.

புரொஜக்டர் மூலம் பெரிதாக திரையில் காண்பிப்பதாலும், குறிப்பிட்ட பாடம் தொடர்பான காணொளிகளைக் காண்பிப்பதாலும் மாணவர்கள் எளிதில் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு முறை பனிமலை பற்றியும், அது உருகுவது பற்றியும் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விளக்கியபோதும் புரிந்து கொள்ளாத மாணவர்கள், காணொளி மூலம் விளக்கியபோது உடனே புரிந்துகொண்டனர்.

அனைத்துப் பாடங்களுக்குமான மென்பிரதிகள்

எட்டாம் வகுப்பு வரைதான் பாடம் எடுக்கிறேன். ஆனாலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களின் மென் பிரதிகளை (soft copy) வைத்திருக்கிறேன். புத்தக வடிவைக் காட்டிலும் காட்சி வடிவம், மாணவர்கள் மனதில் இன்னும் ஆழமாய்ப் பதியும் என்பது என்னுடைய எண்ணம். அதையே என்னுடைய கற்பித்தல் முறையிலும் பயன்படுத்துகிறேன்.

முதலில் அனைத்துப் பாடங்களுக்கும் பவர் பாயிண்ட் ஸ்லைடுகளையும், காணொளிகளையும் உருவாக்குவது சவாலாகவே இருந்தது.

பொதுவாக ஒரு பாடத்தின் உள்ளடக்கத்தை சுமார் 150 ஸ்லைடுகளில் விளக்கிவிடலாம். சில சமயங்களில் காணொளிகளை உருவாக்கும் பணி நள்ளிரவு 2, 3 மணி வரை நீளும். ஒரு முறை உருவாக்கிவிட்டால் எப்போதுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உட்கார்ந்து விடுவேன். நம்முடைய மாணவர்களுக்குத்தானே செய்கிறோம் என்ற உணர்வே அதிகம் வேலை செய்யத் தூண்டியிருக்கிறது.

வகுப்புப் பாடங்களோடு, மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கக்கூடிய தேசிய திறனறிவுத் தேர்வுக்கும் உதவலாமே எனத் தோன்றியது. இதற்காக கடந்த ஆறு வருட வினாத்தாள்களைத் திரட்டி அவற்றை ஸ்கேன் செய்தேன். பின்னர் அவற்றை ஸ்லைடுகளாகத் தயார் செய்து கொடுத்தது தேர்வுகளுக்கு உதவியாக இருந்தது.

ஆக்கமளித்த ஆசிரியர்

‘சர்வ சிக்‌ஷ அபியான்’ திட்டம் மூலமாக முனைவர் சுப்பையா பாண்டியன் அறிமுகமானார். அவர் அறிவியலையும் ஆய்வுகளையும் மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி எளிமையாக எழுதுபவர். அவர் எனக்கு தூண்டுகோலாக இருந்தார். அவரின் உதவியோடு 6, 7 மற்றும் 8- ம் வகுப்பு மாணவர்கள் 105 பேரைக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஓர் ஆய்வு மூலம் 105 ஆய்வுகளை மேற்கொண்டோம். 2014-ம் ஆண்டில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இந்த ஆய்வுகளை கண்காட்சியாகவும் நடத்தினோம். போதிய அளவு பணம் இருந்ததால் என்னாலேயே மாணவர்களுக்கு ஆய்வுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க முடிந்தது.

இவற்றை எங்கள் மாணவர்களின் பெற்றோர்கள், அருகாமையில் இருக்கும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வந்து பார்வையிட்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இளம் விஞ்ஞானிகளாகப் பார்த்து மகிழ்ந்த தருணம் வாழ்நாளில் மறக்க முடியாதது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இன்னும் பயன்படும் வகையில் நிறைய செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

காணொளிகள் உருவாக்கம்

மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுகளின் ஒவ்வொரு படிநிலைகளையும் படங்களாகக் காட்டுவதைவிட, ஸ்லைடுகளாகவும் அதைவிட காணொளிகளாகக் காட்டும்போது அவர்கள் அறியாமலே ஓர் ஆர்வம் ஏற்பட்டது. அதை வளர்க்கும் நோக்கில் காணொளி வழிக் கற்பித்தலையும் தொடங்கி, பாடங்களுக்கு நூற்றுக்கணக்கான காணொளிகளைப் பயன்படுத்தி வருகிறேன். அதற்கு எடிட்டிங் முக்கியம் என்பதால் அதைக் கற்று வருகிறேன்.

இப்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் ஒவ்வொன்றுக்காகவும் போராட வேண்டி இருக்கிறது. நம்முடைய பாடத்திட்டங்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் பின்தங்கியே உள்ளன. புத்தக அறிவு மட்டும் போதுமானதாக இல்லை. வெளியுலக பொது அறிவும் தேவை. அதற்கான யோசனைகள், திட்டங்கள் இருக்கின்றன. அவை குறித்து செயலாற்றி வருகிறேன்.

இதற்காக நான் புத்தகங்களைக் குறை சொல்லவில்லை. எதற்கெல்லாம் புத்தகம் தேவையோ அங்கெல்லாம் புத்தகங்களையும் எதற்கெல்லாம் தொழில்நுட்பம் தேவையோ அப்போது கணிப்பொறிகளையும், எங்கெல்லாம் கள ஆய்வு தேவைப்படுகிறதோ அப்போது சுற்றுலாக்களையும் எதற்கெல்லாம் சோதனைகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆய்வகங்களையும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துக்கொண்டு செல்வேன். என்னுடைய ஒவ்வொரு மாணவரும் ஊரிலிருக்கும் எல்லா மூலிகைகளின் பெயர்களையும் கூறுவர்.

ஏதாவது தெரியவில்லை என்றால், உடனே தயங்காமல் அதைக் கற்றுக்கொள்வதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன். நம்மை நாமே ஒரு மாணவனாக உணர்வதுதான் முக்கியம். அந்தப் பண்பு இருந்தால் நிச்சயம் வளரலாம். மாணவர்களையும் வளர்க்கலாம்” என்று கூறிப் புன்னகைக்கிறார் அன்பாசிரியர் ரவி.

அன்பாசிரியர் ரவி | அவரின் தொடர்பு எண்: 9842494694

க.சே. ரமணி பிரபா தேவி – தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 20: உமா மகேஸ்வரி- அசத்தும் ஆசிரியர்களின் ‘தோழர்’!Source link

Continue Reading

Trending