சீனாவின் டிஎஸ்எம்சி நிறுவனம்தான், உலகின் மிகப்பெரிய சிப் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. உலக அளவில் 53 சதவீத சிப்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இதனால், கார் உற்பத்தி நிறுவனங்கள், சிப் தேவைக்கு சீனாவைத்தான் பெருமளவில் எதிர்நோக்கியிருக்கின்றன.

போர் விமானங்கள் புடை சூழ அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம், இதைத்தொடர்ந்து தைவான் எல்லையில் சீன போர் விமானங்கள் பறந்ததது ஆகியவை பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது சிப் தட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சீனாவில் உருவாகியுள்ள தற்போதைய சூழல், இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்கான சிப் உற்பத்திக்கு சிறந்த வாய்ப்பை உருவாக்கித்தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, சிப் சப்ளையில் ஏற்படக்கூடிய இடைவெளியை நிரப்ப தேவையான முயற்சிகளில் மேற்கொள்ள வேண்டும். இந்த தருணத்தை வேலை வாய்ப்பையும், சந்தை வாய்ப்பையும் பெருக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link