* இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை பிபா நீக்கியுள்ளதை அடுத்து, யு-17 மகளிர் உலக கோப்பை தொடர் (அக். 11-30) இந்தியாவில் திட்டமிட்டமிட்டபடி நடைபெற உள்ளது.* சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் நடந்த டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதலில், இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.* இந்தியாவில் ஐசிசி தொடர்களை ஒளிபரப்புவதற்கான 4 ஆண்டு உரிமத்தை (2024-2027) டிஸ்னி ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. * உலக கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் மகளிர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் லின்தோய் சனம்பம் (15 வயது) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பைனலில் பிரேசில் வீராங்கனை பியான்கா ரெய்சுடன் மோதிய லின்தோய் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். * இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சிலும் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. மான்செஸ்டரில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 151 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 415 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (கேப்டன் ஸ்டோக்ஸ் 103, போக்ஸ் 113*). இதையடுத்து, 264 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடும் தென் ஆப்ரிக்கா 151 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

Source link