* தென் ஆப்ரிக்க அணியுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் செப். 8ம் தேதி தொடங்க உள்ள 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது போட்டிக்கு அறிவிக்கப்பட்ட 14 வீரர்கள் கொண்ட அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவும், 2வது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்று 1-1 என சமநிலை வகிப்பதால், 3வது டெஸ்ட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.* தென் ஆப்ரிக்காவில் அடுத்த ஆண்டு ஜன. 23ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடருக்கு SA20 என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கேப் டவுன், டர்பன், ஜோகன்னஸ்பர்க், பார்ல், போர்ட் எலிசபெத், பிரிடோரியா ஆகிய 6 நகரங்கள் சார்பில் அணிகள் களமிறங்க உள்ளன. இந்த 6 அணிகளையும் ஐபிஎல் அணி உரிமையாளர்களே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. SA20 தொடருக்கான வீரர்கள் ஏலம் செப். 19ம் தேதி நடைபெற உள்ளது.*சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முதல் முறையாக 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய அவர் 167 புள்ளிகளுடன் ஒரேயடியாக 8 இடங்கள் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானின் முகமது நபி (257 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஷாகிப் ஹசன் (வங்கதேசம், 245), மொயீன் அலி (இங்கிலாந்து, 221), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸி. 183) அடுத்த இடங்களில் உள்ளனர்.

Source link