[ad_1]

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கெட்டியான புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி – 1 கப்
நெய் – 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/2 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும். நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5-6 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!

[ad_2]

Source link