Connect with us

உடல்நலக் குறிப்புகள்

சானிட்டைசரை எப்படி பயன்படுத்த வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..

தற்போது கொரோனா காலம் என்பதால் சானிட்டைசர் அவசிய தேவைகளுள் ஒன்றாகி விட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முழு சக்தி இதனிடம் இல்லை ஆனாலும் 5% வரை நோயில் இருந்து சமாளிக்கலாம். சுகாதாரத்துறை சானிட்டைசரை விட சோப்பை கை கழுவ உபயோகப்படுத்த பரிந்துரை செய்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்துக்கு சாத்தியமில்லை.வேறு வழியே இல்லை சானிட்டைசரை தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த சானிட்டைசரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்..

சாப்பிடும் முன் பயன்படுத்துதல் தவறு:-
சாப்பிடும் முன் சானிட்டைசரை பயன்படுத்துதல் தவறு.அப்படி செய்தால் அதில் உள்ள கெமிக்கல் வயிற்றில் சென்று விஷமாக மாற வாய்ப்பு உள்ளது. பிறகு உயிருக்கே ஆபத்தாகளாம். அது மட்டும் இல்லாமல் அதில் உள்ள ஆல்கஹால் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். நமக்கு கொரோனா வந்தாலும் எதிர்த்து போராட சக்தி இருக்காது.

நறுமணம் மிக்க சானிட்டைசரை பயன்படுத்துவது தவறு:-
நல்ல நறுமணம் மிக்க சானிட்டைசரை பயன்படுத்த கூடாது. நறுமணம் உண்டாக கூடுதல் நச்சு மற்றும் கெமிக்களை சேர்த்து இருப்பார்கள். அது மிகவும கொடிய விஷமாக மாறிவிடும்.அது மட்டும் இல்லாமல் மரபணு வளர்ச்சியை மாற்ற கூடிய திரவம் அதில் உள்ளதாம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மாஸ்க்கை சானிட்டைசரை வைத்து சுத்தம் செய்வது தவறு. அதில் உள்ள கெமிக்கலை நாம் நுகரும் போது வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படலாம். அதுவும் எளிதில் தீ பற்ற வாய்ப்பும் உள்ளதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Source link

உடல்நலக் குறிப்புகள்

கண்ணின் கருவளையத்தை போக்கும்… சரும அழகை பராமரிக்கும் அலோவேரா என்னும் கற்றாழை ஜெல்

அலோவேரா ஜெல் பரவலாக பேசப்படும் ஒரு பொருளாகும். அது பல்வேறு குணங்களைக் கொண்டதாகையால் அநேகர் அதை பயன்படுத்தி வருகின்றனர். கற்றாழையின் இலை கதுப்பு அல்லது கூழ், ஜெல் என்று அழைக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான நீர் உள்ளது. வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதில் உள்ளன.

வறட்சியும் கற்றாழையும்
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது.

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.

பயன்கள்

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” அதாவது “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது.. இதனால் வணிக ரீதியாக அதன் “கூழி” உலகெங்கிலும் சரும் லோசன், சவரம் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ ஆகியவற்றால் சேர்க்கப்படுகின்றது. கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் அலோயின், ‘அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. அலோயின் வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதவீதம் வரை கற்றாழை இலையில் காணப்படுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

இரகங்கள்
கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை குர்குவா கற்றாழை (அலோ பார்படென்ஸ் – Aloe vera), கேப் கற்றாழை (அலோ பெராக்ஸ் – Aloe Ferox), சாகோட்ரின் கற்றாழை (அலோ பெர்ரி – Aloe Perryi) ஆகும். பெரும்பாலும் அலோவேரா பற்றியே அழகுக் குறிப்புகளில் நாம் காண்கிறோம்.

கருவளையம்
கண்ணின் கீழ் இமைக்கும் கீழுள்ள பகுதியில் கருவளையங்கள் இருப்போர் கற்றாழை ஜெல்லை இரவில் தடவலாம். பகல் முழுவதும் கம்ப்யூட்டரை பார்த்துக் களைத்து நாளடைவில் கண்களின் கீழே கருவளையங்கள் தோன்றும். இந்தக் கருவளையங்களில் கற்றாழை ஜெல்லை பூசும்போது, அவற்றிலுள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் இயற்கையானவிதத்தில் கருமையை மாற்றி இயல்பான நிறத்தை மீட்டளிக்கின்றன. கண் பக்கத்திலுள்ள மிருதுவான சருமத்திற்கு கற்றாழை ஜெல்லிலுள்ள ஈரப்பதம் இதத்தை அளிக்கிறது.

சரும பாதுகாப்பு
கற்றாழை ஜெல் பசைபோன்ற தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதத்துடன் காத்துக்கொள்ள இது உதவுகிறது. கற்றாழை ஜெல்லை உடலின்மீது பூசினால், இது சருமத்திற்கு மேல் பாதுகாப்பான ஓர் அடுக்கினை உருவாக்குகிறது. சருமத்திலுள்ள துளைகள் பார்வைக்குத் தட்டுப்பட்டு அழகை குறைப்பதை அலோவேரா ஜெல் தவிர்க்கிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ளன. இவை அனைத்துமே ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்). சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்தால் நிலையற்ற அணுக்களால் (ஃப்ரீ ராடிகல்ஸ்) சருமத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். கற்றாழை ஜெல் அதை தடுக்கிறது. இதை முகத்திலும் பயன்படுத்தலாம்.

சவர காயங்கள்
முக சவரம் செய்யும்போது பிளேடினால் காயம் ஏற்படும். சருமம் பாதிக்கப்படலாம். அதேபோன்று வேக்ஸிங் செய்வோருக்கும் சரும பாதிப்பு உண்டாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இதுபோன்ற சின்னஞ்சிறு காயங்களை ஆற்றுவதில் இந்த ஜெல் சிறந்தது. இந்த ஜெல்லிலுள்ள அதிகப்படியான நீர் இந்தக் காயங்களால் ஏற்படும் எரிச்சலை தணிக்கிறது.

கூந்தல் பராமரிப்பு
கற்றாழை ஜெல்லின் பிஎச் மதிப்பு 4.5 ஆகும். இதை தலையில் தடவினால் முடி வறண்டு போவதை தடுக்கும். கூந்தலை நனைத்து அலோவேரா ஜெல்லை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால் சருமம் மிளிரும். தேங்காயெண்ணெய் அல்லது அல்மாண்ட் ஆயிலுடன் கற்றாழை ஜெல்லை கலந்தும் பயன்படுத்தலாம்.

Source link

Continue Reading

உடல்நலக் குறிப்புகள்

பிளட் பிரஷர் இருப்பவர்கள் வீட்டில் செய்த ஊறுகாய் சாப்பிடலாமா?

இரத்த அழுத்தத்தை சீரான கட்டுப்பாட்டில் வைப்பது என்பது வாழ்நாள் முழுவதும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை. வாழ்வியல் முறையை எப்படி மாற்றிக்கொண்டால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும் என்பதை கணித்தறியவேண்டியது முக்கியம். மது அருந்தாமல் இருப்பது, உப்பு சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான சில முக்கிய செயல்களாகும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது அன்றாடம் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க விரும்புவோர் கவனத்தில் கொள்ளவேண்டியவை:

சாப்பிடக்கூடிய உப்பு எது?
இரத்த அழுத்தம் உயராமல் பராமரிப்பதற்கு சுத்திகரிக்கப்படாத உப்பு சாப்பிடவேண்டியது அவசியம். அயோடைஸ்டு சால்ட் எனப்படும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் சோடியம் மட்டுமே உடலில் சேர்கிறது. பொட்டாசியம் அவற்றில் கிடைப்பதில்லை. ஆகவே, இமாலயன் பிங்க் சால்ட், பிளாக் சால்ட், ராக் சால்ட் போன்று இந்துப்பு என்று அழைக்கப்படும் உப்பினை சேர்த்துக்கொள்ளலாம்.

வீட்டு ஊறுகாயும் அப்பளமும்
இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மனதில் “வீட்டில் செய்த ஊறுகாய், அப்பளமும் சாப்பிடக்கூடாதா?” என்ற கேள்வி பெரிய அளவில் உள்ளது. வீட்டில் செய்யும் ஊறுகாய் மற்றும் பப்படம் போன்றவற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக்கூடியவை. வீட்டில் செய்யும் அப்பளம், புரதம் அதிகமான பயிறு வகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாலும் மிளகு, சீரகம் போன்றவை அவற்றில் இருப்பதாலும் அதில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. ஆகவே, வீட்டில் செய்யும் ஊறுகாய், அப்பளத்தை சாப்பிடலாம் என்று உணவியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

போதுமான உறக்கம்
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். மட்டுமல்ல, தினமும் படுக்கைக்குச் சென்று எழும்பும் நேரம் மாறாமல் கவனித்துக்கொள்ளவேண்டியது முக்கியமாகும்.

நடைப்பயிற்சி
இரத்த அழுத்தம் இருப்பவர்கள் முழுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். முதலாவது நடைப்பயிற்சியில் ஆரம்பிக்கலாம். ஆனால் தொடர்ந்து வேறு பயிற்சிகளையும் சேர்த்து செய்ய வேண்டும். இதயத்திற்கான பயிற்சிகள், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகளை செய்யலாம். யோகாசமும் நல்ல பயனளிக்கும்.

அடைக்கப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். உணவை கெடாமல் பாதுகாப்பதற்காக சேர்க்கப்படும் பொருள்கள், உடல் ஊட்டச்சத்தினை கிரகிப்பதை தடுக்கின்றன. இப்படிப்பட்ட உணவுகள் சோடியம் மற்றும் பொட்டாசியம் இவற்றின் விகிதம், உடலில் நீரின் அளவு ஆகியவற்றை பாதிப்பதால் இரத்த அழுத்தத்தில் பெரும் சமநிலை குலைவை ஏற்படுத்துகின்றன.

Source link

Continue Reading

உடல்நலக் குறிப்புகள்

உடலை குறைக்க நாம் தினமும் பின்பற்ற வேண்டியவை..!

ஓவ்வொரு வயதை கடக்கும் பொழுதும் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும்.சிலர் உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் தொடைகள் குண்டாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் ஆரோக்கிய உணவை சாப்பிடாமல் இருப்பதே. தொப்பை, உடல் எடை குறைத்தல் போன்றவை பற்றி அதிகம் கேள்விபட்டு இருப்போம். ஆனால் தொடை கொழுப்பை குறைத்தல் என்பது பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையாகும். தொடையை மட்டும் குறைக்க எந்த வழியும் இல்லை. தொடையை குறைக்க வேண்டும் என்றால் முழு உடலையும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். சரி வாங்க தொடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

உணவில் உப்பின் அளவை குறைக்கவும்:-
ஏந்த உணவை சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை என்றால் உண்ண முடியாது. அது போல அதிக உப்பை உண்டாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். நிறைய உப்பை பயன்படுத்துவதால் உடலில் அதிக தண்ணீரை வெளிப்படுத்தும். இந்த அளவற்ற தண்ணீரால் உடலின் வடிவத்தை மாற்றும். அதே நேரத்தில் தொடையில் அதிக கொழுப்புகள் சேரும். இதை தவிர்க்க உப்பை குறைவாக எடுத்து கொள்ள வேண்டும்.

HIIT உடற்பயிற்சி செய்யவும்:-
தினமும் காலையில் உடல் பயிற்சி செய்யும் போது அதனுடன் HIIT உடல் பயிற்சியை மேற்கொள்ளவும். இந்த உடற்பயிற்சியை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் செய்யலாம். இந்த உடல் பயிற்சி உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கும் பொழுது உடல் எடையும் சேர்ந்து குறையும். இதனை தினமும் வழக்கமாக்கி கொண்டால் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும்.

புரதம் மற்றும் நார்சத்து உணவை உண்ணுதல்:-
உணவை உண்ணும் பொழுது அதில் எவ்வகை சத்து உள்ளது என்பதை ஆராய்ந்து சாப்பிடவும். அதுவும் தொடையை குறைக்க கவனம் செலுத்தி வருபவர்கள் புரதம் மற்றும் நார்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட பழகி கொள்ள வேண்டும். இது போல் சாப்பிட்டால் தொடைகளில் கொழுப்பு குறைவதை சீக்கிரமே உணரலாம்.

Source link

Continue Reading

Trending