சர்வதேச விமான நிலையமாக மாறும்போது பெரிய விமானங்கள் வந்து செல்ல ரன்வே நீளத்தை அதிகரிப்பதற்கேற்ப அருகில் உள்ள பகுதியில் 633.17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்குடி, அயன்பாப்பாக்குடி, பாப்பனோடை, குசவன்குண்டு, ராமன்குளம், கூடல்செங்குளத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோருக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக விமான நிலைய எல்லையை சுற்றி சுவர் கட்ட ரூ.34.37 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் இறுதியானதும் 14 மாதங்களில் கட்டுமான பணி முடிக்கப்படும்.

விமான நிலையத்தின் ரன்வே ஒரு கி.மீ., தொலைவு அதிகரிக்க வேண்டி உள்ளது. அப்போது தற்போதைய ரிங்ரோடு, விமான நிலைய எல்லைக்குள் வரும். எனவே இதில் ரிங்ரோட்டை ரன்வேயின் கீழே செல்லும் வகையில் ‘அண்டர் பாஸ்’ அமைப்பதா அல்லது சுற்றுச்சுவரை சுற்றி அமைப்பதா என்பது இன்னும் முடிவாகவில்லை.தற்போதைய சுற்றுச் சுவரை முழுமையாக அகற்றிவிட்டு உயரமாக, பாதுகாப்பு அம்சங்களுடன் 15 கி.மீ., நீளத்திற்கு அமைய உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link