தமிழ்நாடு
சங்ககிரியில் சாலை பாதுகாப்பு வாரவிழா: கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு- Dinamani

சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு
32வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
32வது சாலை பாதுகாப்பு வார விழா 3வது நாளையொட்டி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டியும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் கார்களில் சீல்பெல்ட் அணிவதன் பாதுகாப்பு பற்றியும் கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டன.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.சுப்ரமணியம் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என். சரவணபவன், வி.கோகிலா, ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற லாரிகள், பேருந்துகள், கார்களின் ஓட்டுநர்கள், பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் எமதர்மன் வேடமணிந்த நபர்கள் தலைவிதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் எமதர்மன் வேடமணிந்த நபர் தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை விளக்கினர். தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு நீல நிற பந்துமுனை பேனாவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களிடம் வழங்கப்பட்டன.
அரசியல்
நடிகர் கருணாசுக்கு வன்னியர் சங்க மா.செ எச்சரிக்கை!

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அவரது முகநூல் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,
பதிலறிக்கை அல்ல
எச்சரிக்கை:
—–
லொடுக்குப்பாண்டி கருணாஸ் எல்லாம் புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. .
பாட்டாளி மக்கள் கட்சியை கண்டிப்பதற்கு கருணாஸ் போன்றவர்களுக்கு துளியளவும் அருகதை இல்லை.
ஒரு நாளைக்கு தன்னோட சாதி கட்சிக்காரங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக மேடையில் பேசி, தமிழ் சமூக இளைஞர்களை போதையின் பாதையில் இட்டு செல்லும் நான்காம் தர அரசியல்வாதி நீ.மன்னார்குடி தயவில் எம்எல்ஏ ஆகி, அதற்கு நன்றி கடனாக கூவத்தூரில் கருணாஸ் செய்த கலைச் சேவைகளை தமிழக மக்களும் ஊடகங்களும் இவ்வுலகமும் அறிந்தவைதானே.எங்கள் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், தன் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் குடிக்கக்கூடாது என்பதற்காக 40 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக போராடி வருவதோடு,சட்ட போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3300 மதுக்கடைகளையும் மூடியது வரலாறு!!
இப்படியிருக்க சரக்கு வாங்கி கொடுப்பதை சாதனை போல பேசுவோரும், ஊற்றி கொடுத்து உற்சாகப்படுத்துவோரும் போதனை சொல்லி அறிக்கை விடுவதைப் பார்த்தால், தமிழக அரசியலின் நிலை வேடிக்கையாக உள்ளது.ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கியும் பாமகவினர் வம்பிழுப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். படக்குழுவினர் தவறை உணர்ந்து, வன்னியர்களது புனித சின்னமான அக்னி கலசத்தை கொலைகார எஸ்ஐ வீட்டு காட்சியிலிருந்து நீக்கியதாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் மனதை புண்படுத்தினார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், காட்சிப்படுத்தியதன் காரணத்தை விளக்குவதும்தான் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கும்.
இதனை குறிப்பிட்டுதான் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் 9 கேள்விகளை கேட்டு படத்தின் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு நாகரீகமான கடிதம் ஒன்று எழுதினார்கள்.அதற்கு தக்க பதில் அளித்திருக்க வேண்டிய சூர்யா, ஒரு கேள்விக்காவது உரிய விளக்கம் கொடுத்தாரா என்றால் இல்லவே இல்லை. அதை விடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பது போல எகத்தாளமாக பதில் தருவது என்ன ரகம்.செய்யாத குற்றத்திற்காக, சம்மந்தமில்லாத வன்னிய சமூகத்தை கொடூர கொலைகார சமூகமாக சித்தரித்த பழிகார நடிகன் சூர்யாவிற்கு இத்தனை ஆதரவு இருப்பதாக திரைக்கூத்தாடிகள் காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இக்கொலைக்கு நீதி கிடைக்க ராசாக்கண்ணு குடும்பத்துக்கு ஆதரவாக அவ்வூரைச் சேர்ந்த வன்னிய சமூகம் தான் துணை நின்றதென்பது வரலாறு.அதை அறிந்துகொண்ட பிறகும் வரலாற்றை திரித்து ஜெய்பீம் படக் கும்பலால் பழி சுமத்தப்பட்டு மனம் நொந்து நிற்கும் மூன்று கோடி வன்னிய சொந்தங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை விரைவில் இந்த அடாவடி திரையுலக அறிக்கை கும்பல் உணரும்.அதை வன்னியர் சங்கம் உணர்த்தும்.
பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியை 1 % கூட உணராதஇதுபோன்ற பலரின் வெற்று அறிக்கைகளை பலவற்றைப் பார்த்துதான் 40 ஆண்டுகாலம் இந்த இயக்கம் சமூகப்பணி ஆற்றி வருகிறது.லொடுக்குப் பாண்டியே இத்துடன் நிறுத்திக்கொள்!!இது உமக்கான பதிலறிக்கை மட்டுமல்ல.கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் கூச்சலிடும் கூத்தாடிகள் அனைவருக்குமானதுதான்..இது அறிக்கையல்ல.எச்சரிக்கை!!.
தமிழ்நாடு
சிவகங்கையில் பல கி.மீ., சென்று வாக்களிக்கும் கிராம மக்கள்: மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏ புகார் | Sivagangai: Final electoral list rolled out
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் பல கி.மீ., சென்று கிராம மக்கள் வாக்களிக்கும் நிலை உள்ளதால், அதை மாற்ற வேண்டுமென ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் எம்எல்ஏ நாகராஜன் புகார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.
தேர்தல் பார்வையாளர் ஆப்ரஹாம், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் பேசுகையில், ‘‘ மானாமதுரை தொகுதியில் சில கிராம மக்கள் வாக்களிக்க பல கி.மீ., வரை செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்,’’ என்று கூறினார்.
தொடர்ந்து மற்ற அரசியல் கட்சியினர் பேசுகையில், ‘புதிய வாக்காளர்களுக்கு இதுவரை அடையாள அட்டை கிடைக்கவில்லை. மனு கொடுத்தும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முகவரி மாறி, மாறி அச்சிட்டுள்ளனர்,’ என்று தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
புதிய வாக்காளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முகவரி மாறியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வர். இரண்டு கி.மீ.,க்கு அப்பால் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நவ.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்கு பிறகு புதிய வாக்காளர்களாக 38,286 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் இறந்தவர்கள், இரட்டை பதிவு என 14,482 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த முறை 80-வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தனி அடையாளம் தர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இறுதிப்பட்டியல் வெளியிட்டாலும் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடக்கும்.
மாவட்டத்தில் 1,348 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2-ஆக பிரிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம், என்று கூறினார்.
தமிழ்நாடு
அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய்விடும்: காஞ்சிபுரத்தில் முதல்வர் பேச்சு- Dinamani
காஞ்சிபுரம்: அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய் விடும் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் காந்திரோடு தேரடி அருகே திறந்த வேனில் நின்று கொண்டே அவர் பேசியது.
நான் முதல்வராக பொறுப்பேற்ற போது ஒரு மாதமோ அல்லது 6 மாதத்துக்கு மேலாகவோ முதல்வராக நீடிக்க மாட்டேன் என்றார் மு.க.ஸ்டாலின். ஆனால், 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடத்தி இப்போது 5 ஆவது ஆண்டும் நிறைவுறும் வகையில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். எப்படியாவது கட்சியை உடைத்து விட வேண்டும். ஆட்சியைக் கலைத்து விட வேண்டும் என்பதே அவரது கனவாக இருக்கிறது. முதல்வர் கனவிலேயே ஸ்டாலினுக்கு தூக்கமும் போய்விட்டது. அதிமுகவை தொட்டுக்கூடப் பார்க்க ஸ்டாலினால் முடியாது.
அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். இப்போது கருணாநிதியின் மகன் அழகிரியும் புதியதாக கட்சி தொடங்கப் போகிறார். எனவே, திமுக உடையும் நிலைக்கு வந்து விட்டது. நான் சிறுக, சிறுக முன்னேறி முதல்வர் வரை உயர்ந்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலின் அப்படியில்லை. அப்பா பேரவை உறுப்பினராகவும், முதல்வராகவும் இருந்ததால் கட்சியின் தலைவராக முடிந்தது. தயவு செய்து அதிமுகவை உடைக்கும் எண்ணத்தையும், ஆட்சியையும் கவிழ்க்கும் எண்ணத்தையும் ஸ்டாலின் விட்டுவிட வேண்டும். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் எதிர்க்கட்சி வரிசையிலாவது உட்கார முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நாங்கள் மக்களுக்கு செய்த திட்டங்களை, சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். நீங்களும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி வாக்கு சேகரியுங்கள். உங்கள் ஆட்சிக் காலத்தில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்பதால் எதையும் சொல்ல முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றீர்கள். வரக்கூடிய தேர்தலில் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.
திகமுவின் முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் செய்ததாக வழக்கு நடந்து வருகிறது. இதன் தீர்ப்பு வரும்போது திமுக இங்கே இருக்குமா என்பதே சந்தேகம். இதை மறைப்பதற்காக யாரோ எழுதிக் கொடுத்ததை தயாரித்து பொய்யான புகார்களுடன் அதிமுக அரசு மீது ஆளுநரிடம் புகார் கொடுத்தது திமுக. ஸ்பெக்டிரம் ஊழலில் 1.07 லட்சம் கோடி ஊழல் செய்து இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது விலை உயர்ந்த நிலங்கள் பலவற்றை பட்டா போட்டு அபகரித்தது. இதனை அறிந்த ஜெயலலிதா நில அபகரிப்பு பிரிவு என்று ஒரு பிரிவையே ஏற்படுத்தி பல பேரின் நிலங்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்துள்ளது. எந்தவித துண்டுச் சீட்டும் இல்லாமல் மு.க.ஸ்டாலினுடன் எந்த இடத்திலும் பேசத் தயாராக இருக்கிறேன். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்பதால் எனக்கு எந்த பயமும் இல்லை. மு.க.ஸ்டாலின் என்னுடன் பேசத்தயாரா என்பதை கேட்டுச் சொல்லுங்கள்.
ஸ்டாலின் மகன் உதயநிதி எங்களை இழிவாகப் பேசுகிறார். பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பெண்களை மதிக்காதவர்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். சாமியே இல்லை என்று கூறியவர்கள் இப்போது கோயில், கோயிலாக ஏறிக்கொண்டிருக்கிறார்கள். என் மனைவி எல்லாக் கோயில்களுக்கும் சென்று வருகிறார் என ஸ்டாலினே சொல்கிறார். தெய்வத்தை உதாசீனப்படுத்தியவர்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் எங்கள் ஆட்சிக் காலத்தில் நடந்தது அதிமுக அரசுக்கு கிடைத்த பாக்கியம். இந்த வைபவத்தின் போது 1.7 கோடி பேர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். இந்த விழாவையும் மிகச்சிறப்பாக நடத்தியது அதிமுக அரசு. கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் அதிகமான பரிசோதனைகளை செய்து கரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறோம். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமரும் பாராட்டியிருக்கிறார்.
ஒரே ஆண்டில் 10க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி இந்த ஆண்டு மட்டும் 313 பேர் பொது மருத்துவம் படிக்கவும், 93 பேர் பல் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தினோம். வரும் ஆண்டில் 443 பேர் பொது மருத்துவமும் 105 பேர் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப் பேரவையில் சட்டமாக்கி இருக்கிறோம். நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்ட போது அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அதை எதிர்த்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறது. சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வோம். இம்மாதம் 27 ஆம் தேதி சென்னையில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் உட்பட அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழக முதல்வருடன் அமைச்சர் பா.பென்ஜமின், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.கே.பழனி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் வந்திருந்தனர்.
-
இந்தியா2 years ago
சீனாவில் தயாரிக்கும் டீவிக்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!
-
அரசியல்1 year ago
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி; மற்ற கட்சிகள் நிலவரம் | rajasthan local body election result: bjp win more than congress | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
சினிமா2 years ago
மருத்துவமணையிலிருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள் – நடிகை விஜயலட்சுமி
-
அரசியல்2 years ago
புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! – மரு.அன்புமணி இராமதாசு!
-
தமிழ்நாடு1 year ago
உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்- Dinamani
-
அரசியல்2 years ago
சிறுமிக்கு பாலியல் தொல்லை – முன்னால் அதிமுக எம்.எல்.ஏ மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!
-
அரசியல்1 year ago
தொழிலதிபர் to அரசியல் பணி – அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன? | Background of Arjuna Moorthy from Business to Politics | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
உடல்நலக் குறிப்புகள்2 years ago
கொரோனா தொற்று எல்லா காலத்திலும் பரவும்! – WHO