கோவை மாவட்ட சுகாதாரத்துறையில் ‛சூப்பர்’ வேலைவாய்ப்பு

கோவை: கோயம்புத்தூர் சுகாதார மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிராம மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 119 நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

கோயம்புத்தூர் சுகாதார மாவட்டத்தில் மொத்தம் 119 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் கோவை மாவட்ட கிராம மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பை (B.sc Nursing) முடித்திருக்க வேண்டும். மேலும் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை படித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?

இந்த பணி தற்காலிகம் அடிப்படையிலான ஒப்பந்த வகையை சேர்ந்ததாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் அதிகபட்ச வயது என்பது 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://coimbatore.nic.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), 219, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் மாவட்டம், தெலைபேசி எண் : 0422-2220351 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பும் விண்ணப்பங்கள் ஜனவரி 30ம் தேதிக்கு அங்கு செல்ல வேண்டும். நேரில் கூட சென்று விண்ணப்பங்களை வழங்கலாம்.