வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மூணாறு : கேரளாவில் ஐந்து நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.
மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு நேற்று பலத்த மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.மலையோரப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இரவு நேர பயணத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. மாநிலத்தில் ஐந்து நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

ரெட் அலர்ட்
பல மாவட்டங்களில் பலத்த மழை நீடிப்பதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் இடமலையாறு, கக்கி, பானாசூரசாகர், பொன்முடி, சோலையாறு, குண்டளை, லோயர் பெரியாறு, கல்லார்குட்டி, மூழியாறு ஆகிய அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
குறைவு
இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டபோதும் அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை. இன்று மாவட்டத்திற்கு எல்லோ அலர்ட் முதலில் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது.அதனால் 15 முதல் 20 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் முன்னெச்சரிக்கை விடப்பட்டது. மழையை எதிர் கொள்ளும் வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement