சென்னை: காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தை விரைவில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று ஜி.கே.வாசன் கூறினார். ஜி.கே.வாசன், குலாம் நபி ஆசாத்துடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ஜி.கே.வாசனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். எனது நெருங்கிய நண்பர். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் அவருடன் தொலைபேசியில் பேசினேன். தற்போது நான் டெல்லி செல்ல உள்ளேன். அப்போது குலாம் நபி ஆசாத்தை நேரில் சந்தித்து பேச உள்ளேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 9 ஆண்டுகளை கடந்து விட்டது. இருந்தாலும் கட்சியில் இருந்து வெளியேறும் போதும் சரி, இப்போதும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதது நான் ஒருவன் மட்டுமே’’ என்றார்.

Source link