வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்.கிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தை, மற்றொரு காங். மூத்த தலைவரான ஆனந்த் ஷர்மா சந்தித்து பேசினார்.

;காங்கிரஸ் கட்சியில், 50 ஆண்டுகளாக அங்கம் வகித்த காஷ்மீரை சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 73, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். இது தொடர்பாக காங்., இடைக்கால தலைவர் சோனியாவுக்கு ஐந்து பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார்.

latest tamil news


மாபெரும் கட்சியான காங்கிரஸ் சீரழிவிற்கு அவரது மகன் ராகுல் தான் முழு பொறுப்பு என்றும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங். கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த் ஷர்மா. இன்று டில்லியில் உள்ள குலாம் நபிஆசாத் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் இருவரும் என்ன பேசினர் என்பது குறித்த தகவல் இல்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link