ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்:

பசலைக் கீரை, வெந்தயக் கீரை, கறிவேப்பிலை, புதினாக்கீரை, கொத்துமல்லிக் கீரை

வைட்டமின் “ஏ’ உள்ள கீரைகள்:

முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லிக் கீரை, பசலைக் கீரை, கறிவேப்பிலை, முளைக் கீரை, வெந்தயக் கீரை 

இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள்:

பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, புதினாக் கீரை, முருங்கைக்கீரை.

சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள கீரைகள்:

முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை, புதினாக் கீரை, முளைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை இவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது.Source link