Connect with us

இந்தியா

காளான் விவசாயியாக மாறிய இன்ஜினீயர்: காஷ்மீர் இளைஞருக்கு கரோனா கற்றுத்தந்த பாடம் | J-K: Udhampur engineer takes up mushroom farming after job loss due to Covid

கோவிட் காரணமாக வேலை இழந்த உதம்பூர் இன்ஜினீயர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு இன்று கணிசமான வருவாயை ஈட்டி வருகிறார்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட கரோனா லாக்டவுன் பலரின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இதில் பன்னாட்டு நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் உயர்மட்டப் பணியாளர்களிலிருந்து கட்டிட வேலை செய்யும் சாதாரணத் தொழிலாளிகள் வரை பலரும் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.

இதில் காஷ்மீர் மாநிலம், உதம்பூரைச் சேர்ந்த இன்ஜினீயர் ராகேஷ் சர்மாவும் விதிவிலக்கல்ல. எனினும் அவர் நிலைமையைப் புரிந்துகொண்டு முற்றிலும் புதிய பாதைக்கு தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்.

லாக்டவுனில் வாழ்வாதாரத்தை இழந்த பின்னர், நல்ல வருமானம் இன்றி வறுமைக்குத் தள்ளப்பட்ட ராகேஷ் சர்மா, தனது பழைய வேலையை மீண்டும் எதிர்பார்க்கவில்லை. விவசாயத்திலும் அவரால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டார். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய விவசாய முறைகளைக் கற்றார். காளான் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினார்.

காளான் வளர்ப்பு குறைந்த முதலீடு மற்றும் குறைந்த இடத்துடன் தொடங்கக்கூடிய மிகவும் லாபகரமான ஒன்றாக அறியப்படுகிறது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பல இளைஞர்கள் காளான் வளர்ப்பில் ஈர்க்கப்படுகிறார்கள். இதுவும் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மனிர்பர் பாரத் முயற்சியில் இருந்து உத்வேகம் பெற்ற பின்னர் காளான் விவசாயியாக மாறிவிட்ட ராகேஷ் சர்மா, கோவிட் -19 ஊரடங்கின்போது உற்பத்திக் கூடத்தைத் தொடங்கினார். அவரிடம் இப்போது 5 பேர் பணியாற்றுகிறார்கள்.

இதுகுறித்து ராகேஷ் சர்மா கூறியதாவது:

“கோவிட் லாக்டவுனில் நான் பணியாற்றி வந்த இன்ஜினீயர் வேலையையும் இழந்துவிட்ட பிறகு நான் வீட்டிற்குத் திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நல்ல வருமானத்தையும் இழந்துவிட்டேன். தொடர்ந்து எனது வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலே இந்தக் காளான் பண்ணையைத் தொடங்க முக்கியக் காரணமானது. மேலும் வேலையின்மை அதிகமாக இருப்பதால் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் அவசியம் என்று உணர்ந்தேன். மோடி ஜியின் ஆத்மனிர்பர் முயற்சியிலிருந்து நான் உத்வேகம் பெற்றேன்.

டாக்டர் பனார்ஜி எனக்கு வழிகாட்டினார். மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக குடிசையிலிருந்தே வேளாண்மைத் துறை உதவியுடன் காளான் உற்பத்தியைத் தொடங்கினேன். வேளாண் துறையும் எனக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. தற்போது கிடைத்துவரும் எனது வருவாய் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பயிரிட, சுத்தம் செய்ய, பார்சல் கட்ட என ஐந்து பணியாளர்களை இப்போது வேலைக்கு அமர்த்தியுள்ளேன்.”

இவ்வாறு ராகேஷ் சர்மா தெரிவித்தார்.

ராகேஷ் சர்மாவின் ஊழியர்களில் ஒருவரான அபிஷேக் சர்மா கூறுகையில், “ஜம்மு-காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. எனவே, இந்த முயற்சியைத் தொடங்குவதற்கு உதவி புரிந்ததற்காக ராகேஷ் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

காளான் மேம்பாட்டுத் துறையின் உதவியாளர் சுனில் குப்தா ராகேஷ் சர்மா முயற்சியைப் பாராட்டினார்.

இதுகுறித்து குப்தா கூறுகையில், “தனது தொழிலைத் தொடங்க தன்னிடம் ஒரு கொட்டகை இல்லை என்று ராகேஷ் என்னிடம் கூறினார். அரசாங்கம் அவருக்கு மானியம் வழங்கியது. ஒரு பொறியியலாளராக அவர் இதை மிகச் சிறப்பாகச் செய்தார். மூங்கில் கட்டமைப்பை அவரே கட்டினார். உற்பத்திக் கூடத்தை மிகவும் சிறப்பாக நிறுவியதன் மூலம் ஒரு நல்ல வேலை செய்துள்ளார். அவர் மற்ற இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம்” என்றார்.Source link

அரசியல்

முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் அடுத்த கையகப்படுத்தல் எது

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், சிறிய மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளை கொண்ட dozens நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது சில்லறை வர்த்தக பிரிவினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் ஆன்லைன், ஆஃப்லைனில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு பல்வேறு நிறுவனங்களையும், ப்லவேறு பிராண்டுகளையும் கையகப்படுத்தி வருகின்றது.

இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் 50 – 60 மளிகை, வீட்டுக்கு தேவையான பொருட்கள், பர்சனல் கேர் உள்ளிட்ட பல பிராண்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் பல்வேறு பிராண்டுகளைடும் தொடர்ந்து கையகப்படுத்தி வருகின்றது.

இந்த கையகப்படுத்தல் மூலம் ரிலையன்ஸ் ரீடெயில் பெயரில் நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் விற்பனை செயப்படும். மேலும் தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்யும், இது ஆஃப் லைன் மற்றும் ஆன்லைனில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரிலையன்ஸ் சுமார் 30 பிரபலமான உள்ளூர் பிராண்டுகளை கையகப்படுத்தலாம் அல்லது கூட்டு முயற்சிக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இவற்றில் பல இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு என்ன என்பது எதுவும் தெளிவாக தெரியவில்லை. எனினும் இந்த முயற்சியின் மத்தியில் ரிலையன்ஸ் ரீடெயில் வணிகத்தின் மொத்த விற்பனை இலக்கு, 5 ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் ரூபாயாக இருக்கும் என கணித்துள்ளது.

இந்த புதிய வணிக திட்டத்தின் மூலம் பல வருடங்களாகவே இயங்கி வரும் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சிகோ இன்க், கோகோ கோலா போன்ற பல உலகின் மிகப்பெரிய குழுக்களோடு சவால்விட விரும்புகிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் விற்பனையானது மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.5 பில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 10 இந்திய குடும்பங்களில் 9 குடும்பங்களில் இதன் பிராண்டுகளில் ஒன்றையாவது பயன்படுத்துகின்றனராம்.

Continue Reading

அரசியல்

நடிகர் கருணாசுக்கு வன்னியர் சங்க மா.செ எச்சரிக்கை!

vaithi

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அவரது முகநூல் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,

பதிலறிக்கை அல்ல
எச்சரிக்கை:
—–
லொடுக்குப்பாண்டி  கருணாஸ் எல்லாம் புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  .

பாட்டாளி மக்கள் கட்சியை கண்டிப்பதற்கு கருணாஸ் போன்றவர்களுக்கு துளியளவும் அருகதை இல்லை.

ஒரு நாளைக்கு தன்னோட சாதி கட்சிக்காரங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக மேடையில் பேசி, தமிழ் சமூக இளைஞர்களை போதையின் பாதையில்  இட்டு செல்லும் நான்காம் தர அரசியல்வாதி நீ.மன்னார்குடி தயவில் எம்எல்ஏ ஆகி, அதற்கு நன்றி கடனாக கூவத்தூரில் கருணாஸ் செய்த கலைச் சேவைகளை தமிழக மக்களும் ஊடகங்களும் இவ்வுலகமும் அறிந்தவைதானே.எங்கள் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், தன் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் குடிக்கக்கூடாது என்பதற்காக 40 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக போராடி வருவதோடு,சட்ட போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3300 மதுக்கடைகளையும் மூடியது வரலாறு!!

இப்படியிருக்க சரக்கு வாங்கி கொடுப்பதை சாதனை போல பேசுவோரும், ஊற்றி கொடுத்து உற்சாகப்படுத்துவோரும் போதனை சொல்லி அறிக்கை விடுவதைப் பார்த்தால், தமிழக அரசியலின் நிலை வேடிக்கையாக உள்ளது.ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கியும் பாமகவினர் வம்பிழுப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். படக்குழுவினர் தவறை உணர்ந்து, வன்னியர்களது புனித சின்னமான அக்னி கலசத்தை கொலைகார எஸ்ஐ வீட்டு காட்சியிலிருந்து நீக்கியதாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் மனதை புண்படுத்தினார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், காட்சிப்படுத்தியதன் காரணத்தை விளக்குவதும்தான் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கும்.

இதனை குறிப்பிட்டுதான் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் 9 கேள்விகளை கேட்டு படத்தின் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு நாகரீகமான கடிதம் ஒன்று எழுதினார்கள்.அதற்கு தக்க பதில் அளித்திருக்க வேண்டிய சூர்யா, ஒரு கேள்விக்காவது உரிய விளக்கம் கொடுத்தாரா என்றால் இல்லவே இல்லை. அதை விடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பது போல எகத்தாளமாக பதில் தருவது என்ன ரகம்.செய்யாத குற்றத்திற்காக, சம்மந்தமில்லாத வன்னிய சமூகத்தை கொடூர கொலைகார சமூகமாக சித்தரித்த பழிகார நடிகன் சூர்யாவிற்கு இத்தனை ஆதரவு இருப்பதாக திரைக்கூத்தாடிகள் காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே இக்கொலைக்கு நீதி கிடைக்க ராசாக்கண்ணு குடும்பத்துக்கு ஆதரவாக அவ்வூரைச் சேர்ந்த வன்னிய சமூகம் தான் துணை நின்றதென்பது வரலாறு.அதை அறிந்துகொண்ட பிறகும் வரலாற்றை திரித்து ஜெய்பீம் படக் கும்பலால் பழி சுமத்தப்பட்டு மனம் நொந்து நிற்கும் மூன்று கோடி வன்னிய சொந்தங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை விரைவில் இந்த அடாவடி திரையுலக அறிக்கை கும்பல் உணரும்.அதை வன்னியர் சங்கம் உணர்த்தும். 

பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியை 1 % கூட உணராதஇதுபோன்ற பலரின் வெற்று அறிக்கைகளை பலவற்றைப் பார்த்துதான்  40 ஆண்டுகாலம் இந்த இயக்கம் சமூகப்பணி ஆற்றி வருகிறது.லொடுக்குப் பாண்டியே இத்துடன் நிறுத்திக்கொள்!!இது உமக்கான பதிலறிக்கை மட்டுமல்ல.கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் கூச்சலிடும் கூத்தாடிகள் அனைவருக்குமானதுதான்..இது அறிக்கையல்ல.எச்சரிக்கை!!.

Continue Reading

இந்தியா

எடுத்த எடுப்பிலேயே கர்நாடகத்துக்கு கண்டனம். தமிழக அரசு துணிந்து நடவடிக்கை எடுக்கனும். அதிமுக தீர்மானம்.

தமிழக அரசு துணிந்து நடவடிக்கை

எடுத்த எடுப்பிலேயே கர்நாடகத்துக்கு கண்டனம். தமிழக அரசு துணிந்து நடவடிக்கை எடுக்கனும். அதிமுக தீர்மானம்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது,

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதுகுறித்து விவாதிக்க நேற்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது அக்கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முதலாவது தீர்மானமாக தமிழ்நாட்டின் இதயத்துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையை காக்க வேண்டும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தின் முழு விவரம்: 

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமை நிலைநாட்டப்பட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியால் நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டது என்பது உலகறிந்த வரலாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, ஏரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டி இருக்கிறது. ஒரு நதியின் கீழ் பாசன பகுதியினரின் ஒப்புதலின்றி மேல் பாசன பகுதியினர் அணை கட்டிக் கொள்ளக் கூடாது என்பது சர்வதேச நடைமுறை ஆகும். இதையே உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. இதைமீறி கர்நாடக அரசு அணை கட்டி உள்ளது. இது வன்மையாககண்டிக்கத்தக்கது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது, தமிழ்நாட்டின் இசைவைப் பெறாமல் புதிய அணையை  கர்நாடக அரசு மேகதாதுவில் கட்ட இயலாது, அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால், தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது என்று 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சராக வீற்றிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்கள். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அணைகள் கட்டப்படுவதற்கு, எதிராக வழக்குத் தொடுப்பதை 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது அப்போதைய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் சுட்டிக்காட்டி அணைகள் கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.

அதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு .எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மேலும் பாரதப்பிரதமர் அவர்களை நேரில் இரண்டு முறை சந்தித்த போது மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் சூழ்நிலை ஏற்படும் என்றும் எடுத்துக் கூறினார். எனவே மேற்சொன்ன வரலாற்று உண்மைகளை நினைவில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைந்தும், துணிந்தும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Continue Reading

Trending