வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டில்லி துணை நிலை கவர்னர் பதவி விலக கோரி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் டில்லி சட்டசபைக்குள் தங்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பண மோடி வழக்குபதிந்துள்ளது அமலாக்கத்துறை.

இந்நிலையில் துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா பதவி விலக கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சவுரபா பரத்வாஜ் தலைமையில் சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டில்லி சட்டசபைக்குள் தங்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

latest tamil news


இது குறித்து துர்கேஷ் பதக் என்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கூறியது, கடந்த 2016-ல் காதி கிராம தொழில் ஆயைணத்தின் தலைவராக இருந்த சக்சேனா மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளானவர் கவர்னராக இருக்க தகுதியில்லை. அவர் பதவி விலகும் வரை டில்லி சட்டசபையில் தங்கும் போராட்டத்தை இன்று துவக்கியுள்ளோம் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link