இந்தியா
கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் அட்டகாசம்
கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி அருகே தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த எல்லை பலகைகளை வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கிய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் வரவேற்பு பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை ஆகிய இரண்டையும் இன்று மாலை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.
இந்த இரண்டு பலகைகளும் தமிழில் எழுதப்பட்டிருந்ததுதான் காரணமாம். கன்னட சலுவாலியா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது கட்சியினர் சுமார் 50 பேர் இன்று மாலை பாரதிபுரம் வந்து தமிழ்பெயர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை கிழித்தும், பெயர்பலகையை அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தினர். பின்னர் கன்னட மொழியில் கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இரு மாநில எல்லை வழியாக செல்லும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் தமிழில் மட்டுமே வைக்கப்பட்டதை கண்டித்து வைக்கப்பட்ட பெயர் பலகைகளை வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாட்டள் நாகராஜ் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. கன்னட அமைப்பினர் நடத்திய இந்த போராட்டத்திற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அரசியல்
முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் அடுத்த கையகப்படுத்தல் எது

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், சிறிய மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளை கொண்ட dozens நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது சில்லறை வர்த்தக பிரிவினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் ஆன்லைன், ஆஃப்லைனில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு பல்வேறு நிறுவனங்களையும், ப்லவேறு பிராண்டுகளையும் கையகப்படுத்தி வருகின்றது.
இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் 50 – 60 மளிகை, வீட்டுக்கு தேவையான பொருட்கள், பர்சனல் கேர் உள்ளிட்ட பல பிராண்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் பல்வேறு பிராண்டுகளைடும் தொடர்ந்து கையகப்படுத்தி வருகின்றது.
இந்த கையகப்படுத்தல் மூலம் ரிலையன்ஸ் ரீடெயில் பெயரில் நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் விற்பனை செயப்படும். மேலும் தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்யும், இது ஆஃப் லைன் மற்றும் ஆன்லைனில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் சுமார் 30 பிரபலமான உள்ளூர் பிராண்டுகளை கையகப்படுத்தலாம் அல்லது கூட்டு முயற்சிக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இவற்றில் பல இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு என்ன என்பது எதுவும் தெளிவாக தெரியவில்லை. எனினும் இந்த முயற்சியின் மத்தியில் ரிலையன்ஸ் ரீடெயில் வணிகத்தின் மொத்த விற்பனை இலக்கு, 5 ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் ரூபாயாக இருக்கும் என கணித்துள்ளது.
இந்த புதிய வணிக திட்டத்தின் மூலம் பல வருடங்களாகவே இயங்கி வரும் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சிகோ இன்க், கோகோ கோலா போன்ற பல உலகின் மிகப்பெரிய குழுக்களோடு சவால்விட விரும்புகிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் விற்பனையானது மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.5 பில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 10 இந்திய குடும்பங்களில் 9 குடும்பங்களில் இதன் பிராண்டுகளில் ஒன்றையாவது பயன்படுத்துகின்றனராம்.
அரசியல்
நடிகர் கருணாசுக்கு வன்னியர் சங்க மா.செ எச்சரிக்கை!

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டது வன்னியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் கருணாஸ் சூரியாவிர்க்கு ஆதரவாகவும், வன்னியர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அவரது முகநூல் பக்கத்தில் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,
பதிலறிக்கை அல்ல
எச்சரிக்கை:
—–
லொடுக்குப்பாண்டி கருணாஸ் எல்லாம் புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் தள்ளப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. .
பாட்டாளி மக்கள் கட்சியை கண்டிப்பதற்கு கருணாஸ் போன்றவர்களுக்கு துளியளவும் அருகதை இல்லை.
ஒரு நாளைக்கு தன்னோட சாதி கட்சிக்காரங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சரக்கு வாங்கி கொடுப்பதாக மேடையில் பேசி, தமிழ் சமூக இளைஞர்களை போதையின் பாதையில் இட்டு செல்லும் நான்காம் தர அரசியல்வாதி நீ.மன்னார்குடி தயவில் எம்எல்ஏ ஆகி, அதற்கு நன்றி கடனாக கூவத்தூரில் கருணாஸ் செய்த கலைச் சேவைகளை தமிழக மக்களும் ஊடகங்களும் இவ்வுலகமும் அறிந்தவைதானே.எங்கள் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், தன் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் குடிக்கக்கூடாது என்பதற்காக 40 ஆண்டுகாலமாக மதுவுக்கு எதிராக போராடி வருவதோடு,சட்ட போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளையும், தமிழ்நாட்டில் 3300 மதுக்கடைகளையும் மூடியது வரலாறு!!
இப்படியிருக்க சரக்கு வாங்கி கொடுப்பதை சாதனை போல பேசுவோரும், ஊற்றி கொடுத்து உற்சாகப்படுத்துவோரும் போதனை சொல்லி அறிக்கை விடுவதைப் பார்த்தால், தமிழக அரசியலின் நிலை வேடிக்கையாக உள்ளது.ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியினை நீக்கியும் பாமகவினர் வம்பிழுப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறீர்கள். படக்குழுவினர் தவறை உணர்ந்து, வன்னியர்களது புனித சின்னமான அக்னி கலசத்தை கொலைகார எஸ்ஐ வீட்டு காட்சியிலிருந்து நீக்கியதாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் மனதை புண்படுத்தினார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பதும், காட்சிப்படுத்தியதன் காரணத்தை விளக்குவதும்தான் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கும்.
இதனை குறிப்பிட்டுதான் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் 9 கேள்விகளை கேட்டு படத்தின் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கு நாகரீகமான கடிதம் ஒன்று எழுதினார்கள்.அதற்கு தக்க பதில் அளித்திருக்க வேண்டிய சூர்யா, ஒரு கேள்விக்காவது உரிய விளக்கம் கொடுத்தாரா என்றால் இல்லவே இல்லை. அதை விடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பது போல எகத்தாளமாக பதில் தருவது என்ன ரகம்.செய்யாத குற்றத்திற்காக, சம்மந்தமில்லாத வன்னிய சமூகத்தை கொடூர கொலைகார சமூகமாக சித்தரித்த பழிகார நடிகன் சூர்யாவிற்கு இத்தனை ஆதரவு இருப்பதாக திரைக்கூத்தாடிகள் காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இக்கொலைக்கு நீதி கிடைக்க ராசாக்கண்ணு குடும்பத்துக்கு ஆதரவாக அவ்வூரைச் சேர்ந்த வன்னிய சமூகம் தான் துணை நின்றதென்பது வரலாறு.அதை அறிந்துகொண்ட பிறகும் வரலாற்றை திரித்து ஜெய்பீம் படக் கும்பலால் பழி சுமத்தப்பட்டு மனம் நொந்து நிற்கும் மூன்று கோடி வன்னிய சொந்தங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பதை விரைவில் இந்த அடாவடி திரையுலக அறிக்கை கும்பல் உணரும்.அதை வன்னியர் சங்கம் உணர்த்தும்.
பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியை 1 % கூட உணராதஇதுபோன்ற பலரின் வெற்று அறிக்கைகளை பலவற்றைப் பார்த்துதான் 40 ஆண்டுகாலம் இந்த இயக்கம் சமூகப்பணி ஆற்றி வருகிறது.லொடுக்குப் பாண்டியே இத்துடன் நிறுத்திக்கொள்!!இது உமக்கான பதிலறிக்கை மட்டுமல்ல.கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல் கூச்சலிடும் கூத்தாடிகள் அனைவருக்குமானதுதான்..இது அறிக்கையல்ல.எச்சரிக்கை!!.
இந்தியா
எடுத்த எடுப்பிலேயே கர்நாடகத்துக்கு கண்டனம். தமிழக அரசு துணிந்து நடவடிக்கை எடுக்கனும். அதிமுக தீர்மானம்.
தமிழக அரசு துணிந்து நடவடிக்கை

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது,
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதுகுறித்து விவாதிக்க நேற்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது அக்கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முதலாவது தீர்மானமாக தமிழ்நாட்டின் இதயத்துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையை காக்க வேண்டும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தின் முழு விவரம்:
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமை நிலைநாட்டப்பட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியால் நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டது என்பது உலகறிந்த வரலாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, ஏரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டி இருக்கிறது. ஒரு நதியின் கீழ் பாசன பகுதியினரின் ஒப்புதலின்றி மேல் பாசன பகுதியினர் அணை கட்டிக் கொள்ளக் கூடாது என்பது சர்வதேச நடைமுறை ஆகும். இதையே உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. இதைமீறி கர்நாடக அரசு அணை கட்டி உள்ளது. இது வன்மையாககண்டிக்கத்தக்கது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது, தமிழ்நாட்டின் இசைவைப் பெறாமல் புதிய அணையை கர்நாடக அரசு மேகதாதுவில் கட்ட இயலாது, அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால், தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது என்று 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சராக வீற்றிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்கள். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அணைகள் கட்டப்படுவதற்கு, எதிராக வழக்குத் தொடுப்பதை 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது அப்போதைய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் சுட்டிக்காட்டி அணைகள் கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.
அதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு .எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மேலும் பாரதப்பிரதமர் அவர்களை நேரில் இரண்டு முறை சந்தித்த போது மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் சூழ்நிலை ஏற்படும் என்றும் எடுத்துக் கூறினார். எனவே மேற்சொன்ன வரலாற்று உண்மைகளை நினைவில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைந்தும், துணிந்தும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இந்தியா2 years ago
சீனாவில் தயாரிக்கும் டீவிக்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!
-
அரசியல்1 year ago
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி; மற்ற கட்சிகள் நிலவரம் | rajasthan local body election result: bjp win more than congress | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
சினிமா2 years ago
மருத்துவமணையிலிருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள் – நடிகை விஜயலட்சுமி
-
அரசியல்2 years ago
புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! – மரு.அன்புமணி இராமதாசு!
-
தமிழ்நாடு1 year ago
உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்- Dinamani
-
அரசியல்1 year ago
தொழிலதிபர் to அரசியல் பணி – அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன? | Background of Arjuna Moorthy from Business to Politics | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
அரசியல்2 years ago
சிறுமிக்கு பாலியல் தொல்லை – முன்னால் அதிமுக எம்.எல்.ஏ மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!
-
உடல்நலக் குறிப்புகள்2 years ago
கொரோனா தொற்று எல்லா காலத்திலும் பரவும்! – WHO