நன்றி குங்குமம் ஆன்மீகம் ஆலத்தூர் பொதுவாக முருகன் ஆலயங்களில் முருகன் வேலுடன்தான் காட்சி தருவார். ஆனால் வலக்கையில் இனிமையான செங்கரும்பை ஏந்தி பாலதண்டாயுதபாணியாக முருகன் அருள்பாலிக்கும் தலம் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் எனும் ஊரில் உள்ளது. இவ்வூரில் உள்ள மலைக்கோயிலில் இந்த அரிய தரிசனத்தைக் காணலாம். 240 படிகளுடன் கூடிய, பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த பாலதண்டாயுதபாணியின் சிரசில் குடுமி உள்ளது. உற்சவ மூர்த்தியோ கையில் செங்கரும்பை ஏந்தியுள்ளார். இவை பிற எந்த முருகன் ஆலயத்திலும் காண இயலாத அற்புதம்.இதே …