ட்விட்டரில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் ஒரு வார்த்தையில் பதிவிட்டு வருவது ட்ரண்டாகி வருகின்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கிரிக்கெட் வீரர் சச்சின், தமிழக முதல்வர் ஸ்டாலின் என பலரும் ஒரு வார்த்தை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இணைந்தனர்.

சமூக வலைதளங்களில் உருவாகும் டிரெண்ட்டுகள் பலவும் பொருளற்றும் தொடங்கி பெரும் கருத்தியல் மோதல்களோடு முடிவடையும். அந்த வரிசையில் இந்த ஒரு வார்த்தை டிரெண்டும் இணைந்துள்ளது.

எப்படி தோன்றியது? – அமெரிக்காவில் உள்ள ரயில் சேவை நிறுவனம் ஆம்ட்ராக். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘trains’ என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்திருந்தது. இதனையடுத்து பலரும் இதேபோல ஒரே வார்த்தையில் ட்வீட் செய்யத் தொடங்கினர். இதன் பின்னணியில் வர்த்தக பின்னணி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், இதனைத் தொடர்ந்து இந்த ஒரு வார்த்தை ட்ரெண்ட் ட்விட்டரில் காட்டுத் தீ போல பரவத் தொடங்கியது.

உதாரணத்துக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Democracy’ (ஜனநாயகம்) என்று பதிவிட்டிருந்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ’Freedom’ என்றும், சச்சின் டெண்டுல்கர் ‘cricket’ என்றும், நாசா நிறுவனம் ‘universe’ என்று பதிவிட்டிருந்தனர்.

தமிழகம் பக்கம் வந்தால், தமிழக முதல்வர் ஸ்டாலின் ’திராவிடம்’ என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’தமிழன் என்றும்’, அதிமுக ட்விட்டர் பக்கம் ’எடப்பாடியார்’ என்று பதிவிட்டுள்ளனர்.

— K.Annamalai (@annamalai_k) September 2, 2022

பிரபலங்கள் மட்டுமல்லாது நெட்டிசன்கள் தொடங்கி, வர்த்தக நிறுவனங்கள் வரை பலரும் இந்த ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளனர்.Source link