எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்புபணி: ஜூனியர் இன்ஜினியர்.சம்பளம்: ரூ.35,400- 1,12,400.தகுதி: சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் ஆகிய முக்கிய பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பி.டெக்., அல்லது 3 வருட டிப்ளமோ.வயது: 1.1.2022 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சென்ட்ரல் வாட்டர் கமிஷன்/ சென்ட்ரல் பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மென்ட் பணிக்கு 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி.,/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. எஸ்எஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் நடத்தப்படும்.www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணபிக்க கடைசி நாள்: 02.09.2022.

Source link