தை பொங்கலை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று கம்மவார்பாளையத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் வி.பழனிதலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர் பங்கேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது என்றும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், கிளை நிர்வாகிகள், மகளிரணி, மாணவரணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.Source link