திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் அக்டோபர் மாதம் தரிசனம் செய்யவுள்ள பக்தர்கள், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று 18-ம் தேதி ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துகொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் சுவாமியை ரூ.300 சிறப்பு தரிசன கட்டணம் மூலம் (SED) தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகளை இன்று 18-ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. தினமும் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வெளியிடப்பட உள்ளன.

இதனை tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணைய தளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், பிரம்மோற்சவ நாட்களில் வெறும் சர்வ தரிசனத்தை மட்டுமே அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால், அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பக்தர்கள் ரூ. 300 டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாது. இதனை கவனத்தில் கொண்டு பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.Source link