வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மற்ற கட்சிகள் விரும்பினால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் லாலன் சிங் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் 2024 பொது தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்துவதே நிதிஷ்குமாரின் இலக்கு. பிரதமர் ஆகவேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. பீஹார் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை அடுத்த வாரம் முடித்த பின், நிதிஷ்குமார் டில்லி செல்கிறார்.

latest tamil news

எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியை துவக்க உள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதே இப்போதைய நோக்கம். தேர்தலில் வென்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை நிதிஷ்குமார் பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்பினால் அதுபற்றி சிந்திக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link