மதுரை: திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதே எங்களது விருப்பமென முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை பழங்காநத்தம் சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று  நடந்தது. தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ  கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்பு அவர் நிருபர்களிடம் கூறும்போது,
  ‘‘அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு  கவலையில்லை. எடப்பாடியார் தலைமையின் கீழ்தான் தற்போது  அதிமுக தொண்டர்கள்  உள்ளனர். திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தமிழகத்தில் 52 ஆண்டுகளாக திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்து வருகிறது.  திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை ஆகும்’’ என்றார்.

Source link