புதுடெல்லி; உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பல்கேரியாவின் சோபியா நகரில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் பங்கேற்றார்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அன்திம் 8-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை அத்லின் ஷகயேவாவைத் தோற்கடித்து தங்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை அந்திம் பங்கல் புரிந்துள்ளார்.Source link