ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் போலீஸாரின் கடும் சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏஎஸ்பி சுந்தரவதனம் தெரிவித்தார்.

மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள சொகுசு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் 8 ஆய்வாளர்கள் மற்றும் 400 போலீ

ஸார் முட்டுக்காடு, நாவலூர், திருப்போரூர், மாமல்லபுரம் நகர எல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட

னர். இதில், பண்ணை வீடுகள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்த நபர்களை மட்டுமே செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

மேலும், மாமல்லபுரம் நகர எல்லையில் சாலையில் தடுப்புகள் அமைத்து வெளிநபர்கள் உள்ளேசெல்லாத வகையில் கண்

காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். அத்தியாவசிய தேவைக்காக செல்லும் உள்ளூர் மக்களை மட்டும் விசாரித்து அனுமதித்தனர். மேலும், முட்டுக்காடு பகுதியில் பிற்பகல் முதலே சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். திருப்போரூர் பகுதியில் உள்ள ஓஎம்ஆர் சாலையிலும் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதனால், கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரை பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், புத்தாண்டுநாளான இன்றும் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்

பட்டுள்ளதாக மாமல்லபுரம் ஏஎஸ்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஏஎஸ்பி சுந்தரவதனம் கூறும்போது, “கரோனா அச்சத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மட்டுமே அமல்படுத்தியுள்ளோம். புத்தாண்டு நாளில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடுவர் என்பதால் இன்றும் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள நபர்களும் கடற்கரைக்கு செல்லக்கூடாது என விடுதி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தடையை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.மாமல்லபுரம் நகர எல்லையில் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.Source link