உலகோர் வியக்க உயர்ந்து நிற்கும் நமது சமய மரபில், தனக்கு மேல் ஒரு தலைவனே இல்லாத் தலைவனாய்ப் போற்றப்பெறும் சிறப்பினை உடைய கடவுள் விநாயகர் ஆவார். இவ்விநாயகர் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தினையொட்டியே தமிழ்நிலத்தில் தோன்றியது என்பாரும் உண்டு. பல்லவ மன்னர்களுள் மிகப் புகழ்பெற்றவனும் மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களை நிருமாணித்தவனுமாகிய முதலாம் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தளபதியாகச் சிறந்திருந்த பரஞ்சோதி (சிறுத்தொண்டர்) சாளுக்கிய நாட்டில் படையெடுத்து வாதாபியைத் தீக்கிரையாக்கியபொழுது, அங்கிருந்துகொண்டுவரப்பெற்றவரே …

Source link