இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்

8/26/2022 12:19:06 AM

சென்னை: கடந்த 2016ல் திரைக்கு வந்த படம், ‘பென்சில்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா நடித்திருந்தனர். இப்படத்தை இயக்கியவர், மணி நாகராஜ் (45). இவர், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றியவர். இதையடுத்து மணி நாகராஜ் இயக்கி முடித்துள்ள படம், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’. இதில் கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் நடித்துள்ளனர். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் மணி நாகராஜூக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே வளசரவாக்கம் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. இச்சம்பவம் தமிழ்ப் படவுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த மணி நாகராஜூக்கு மனைவி பாய்ஜா இருக்கிறார். இவர், தமிழில் வெளியான ‘யுவன் யுவதி’, ‘காத்திருப்போர் பட்டியல்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். மற்றும் ஒரு மகள் இருக்கிறாள்.

Source link