புதுடெல்லி: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருடன் மூத்த இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெறவுள்ளார்.

இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மூத்த வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடருடன் ஓய்வு பெற அவர் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜூலன் கோஸ்வாமிக்கு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.Source link