நன்றி குங்குமம் ஆன்மிகம் பூவுலகில் அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார். துவாபரயுகத்தின் இறுதியில், கிருஷ்ணர் வசுதேவருக்கும், தேவகிக்கும் 8வது குழந்தையாக அவதரித்தார். அவர் பிறந்த ஊர் மதுரா. ஆய்வாளர்களின் கருத்துப்படி 5250 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தாகக் கணிக்கப்படுகிறது. துவாபரயுகம், ஸ்ரீமுக ஆண்டு, ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி நள்ளிரவில் கிருஷ்ணர் அவதரித்தார். விஷ்ணுபுராணத்தில் 1:5:26 வது ஸ்லோகத்திலும், ஹரிவம்சத்தின் 52 ஆம் பகுதியிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. …