உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும். 

உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது மன அழுத்தமும் வெகுவாகக் குறைவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்ய ஆயில் மசாஜ் வாரத்திற்கு இருமுறை செய்யலாம். முகத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் என இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். 

எண்ணெய்யை லேசாக சூடேற்றி பின்னர் ஆறவைத்து இளஞ்சூடு பதத்தில் இருக்கும்போது மசாஜ் செய்ய வேண்டும். இது ஈரப்பதமாக்குவதோடு மட்டுமல்லாமல், பளபளப்பான சருமத்தைத் தருகிறது. உடல் சூட்டைக் குறைத்து உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. 

இதையும் படிக்க | நகரத்துப் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைவு! ஏன்?

உடலில் உள்ள திரவக் கழிவுகளை வெளியேற்றுகிறது. தொடர்ந்து செய்யும்போது, ​ அது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.  உடலில் பல்வேறு கோளாறுகளை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. 

இளமை மற்றும் ஆரோக்கியமான ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமெனில் அடிக்கடி ஆயில் மசாஜ் செய்யுங்கள்.

உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எண்ணெய்களை தேர்வு செய்வது பயன்படுத்துவது நல்லது.

காலை வேளையில் இளம் வெயில் நேரத்தில் எண்ணெய் மசாஜ் செய்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். 

படுக்கைக்குமுன் இரண்டு நிமிட மசாஜ்கூட உங்கள் சருமத்தில் பல அற்புதங்களைச் செய்யும்.

இதையும் படிக்க | இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க வேண்டியதன் 10 காரணங்கள்!Source link