விநாயகர் சதுர்த்தி 31-8-2022ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மலர்கள், நிவேதனங்கள் விசேஷம். பெருமாளுக்கு துளசி. சிவபெருமானுக்கு வில்வம். பராசக்திக்கு வேப்பிலை. விநாயகருக்கு அறுகம்புல். உலகம் வாழத் தகுதியானதாக இருக்க வேண்டும் என்றால் அங்கே அறுகம்புல் என்ற தாவரம் வளர வேண்டும். உயிரினத்தின் அடிப்படை அறுகம்புல்.புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்எல்லாப் பிறப்பும் …