எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில், புதுப்புது வாகனங்களும் அறிமுகமாகி வருகின்றன. இந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த அல்ட்ரா வயலெட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அதிக திறன் கொண்ட இந்த  எப்77 மோட்டார் சைக்கிள், அதிகபட்சமாக மணிக்கு 147 கி.மீ வேகம் வரை செல்லும் என இந்த நிறுவனம் கூறுகிறது. மேலும் 60 கி.மீ வேகத்தை 2.9 நொடிகளிலும், 100 கி.மீ வேகத்தை 7.5 நொடிகளிலும் எட்டக்கூடியது. எக்கோ, ஸ்போர்ட், இன்சேன் என 3 ரைடிங் மோட்கள் உள்ளன.

இதில் 4.2 கிலோ வாட் அவர் பேட்டரி, ஒரு கிலோ வாட் அவர் சார்ஜர் உள்ளது. இதுதவிர 3 கிலோ வாட் சார்ஜரும் கிடைக்கும். முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். அதிக வேக சார்ஜரில் 1.5 மணி நேரம் போதும். 158 கிலோ எடை கொண்ட இந்த பைக், ஸ்போர்ட்டியான தோற்றத்தில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Source link