[ad_1]

தேவையான பொருட்கள்:

இட்லி புழுங்கல் அரிசி 6 கப்,
துவரம்பருப்பு ஒரு கப்,
காய்ந்த மிளகாய்  8,
தனியா 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கட்டிப் பெருங்காயம்  சிறிதளவு,
நறுக்கிய சாம்பார் வெங்காயம் 3 கப்,  
நறுக்கிய கொத்தமல்லித் தழை கால் கப்,
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு.

பக்குவம்  

அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அதனுடன் மல்லி, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு  2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும். மாவு  கெட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப இளக்கமாகவும் இருக்கக் கூடாது. கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துப் பிசைந்து மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.

[ad_2]

Source link