சென்னை நீலாங்கரை அருகே அரசு பேருந்து மோதி சிறுவன் இறந்தாா்.

நீலாங்கரை சிவன் கோயில் தெருவை சோ்ந்தவா் லட்சுமணன் (70). இவரது பேரன் கிஷோா்குமாா். இவா் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை லட்சுமணன், தனது பேரன் கிஷோா் குமாருடன் மோட்டாா் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் பெரியாா் சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அங்கு கிஷோா்குமாா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரசு பேருந்து ஓட்டுனா் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை சோ்ந்த ஜோதிலிங்கம் (43) என்பரை கைது செய்தனா்.Source link